சுங்கக் கட்டணம் மீண்டும் உயர்வு! வாகன ஓட்டிகள் குமுறல்! அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் சூழல்!

0
73

நாடு முழுவதும் சுங்கசாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி, இன்று முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. ரூ.5 முதல் ரூ.55 வரை கட்டணம் உயர்கிறது. சென்னையை பொறுத்தமட்டில் புறநகர் பகுதியில் உள்ள பரணூர், வானகரம், சூரப்பட்டு, செங்குன்றம், பட்டறை பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது.

Also Read : இந்தியாவில் கரோனா பரவல் அதிகரிப்பு! உலக சுகாதார நிறுவனம் தகவல்! வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்!

சுங்கக் கட்டண உயர்வு காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, மதுரை, கோவை போன்ற இடங்களுக்கு கார் போன்ற வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும்போது கூடுதல் செலவு ஏற்படும்.

கட்டண உயர்வைக் கண்டித்து, திருவண்ணாமலையில், அய்யம்பாளையம் பைபாஸ் ஜங்ஷன் அருகே, திருவண்ணாமலை மாவட்ட சரக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், காலாவதியான 32 சுங்கச் சாவடிகளை அகற்றக் கோரியும், சுங்க கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள், லாரி உரிமையாளர்கள் ஒவ்வொருவருக்கும் மாதாமாதம் ஏழாயிரம் முதல் பத்தாயிரம் வரை கூடுதல் செலவினம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். தற்போதைய கட்டண உயர்வு லாரி உரிமையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். இதனால் வாடகையை உயர்த்துவதை தவிர தங்களுக்கு வேறு வழி இல்லை என்று கூறுகின்றனர். அப்படி லாரி வாடகை உயர்த்தப்பட்டால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும்”. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி இன்று நள்ளிரவு முதல் 29 சுங்கசாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளது.

Also Read : #OnlineRummy தமிழக அரசால் என்ன செய்ய முடியும்? தடையா? முறைப்படுத்துதலா? அலட்சியம் காட்டும் மத்திய அரசு! Vels View

சுங்கச்சாவடி கட்டண உயர்வு தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “தமிழகத்தில் இன்று 36 சுங்கச்சாவடிகளிலும், செப்டம்பரில் 22 சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்படுள்ளது. விதிகளின் படிதான் சுங்கசாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என மத்திய அரசு சொல்கிறது.

5 சுங்கச்சாவடிகள் காலாவதியாகி செயல்பட்டதை அறிந்து மூட வலியுறுத்தியுள்ளோம். சுங்கக் கட்டணம் உயர்வு தொடர்பாக மத்திய அரசுக்கு பல முறை கடிதம் எழுதப்பட்டுள்ளது. பராமரிப்புக்காக வசூலித்தாலும் 40 சதவீதத்திற்கும் குறைவாகவே வசூலிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். எவ்வளவு தூரம் பயணிக்கிறோமோ அதற்கு ஏற்றால் போல் சுங்க கட்டணம் வசூலிக்கும் நடைமுறை வர உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்” இவ்வாறு அவர் கூறினார். கட்டண உயர்வை திரும்பப் பெறுமாறு TN Chamber of Commerce எனப்படும் தமிழ்நாடு வர்த்தக சபை NHAI அமைப்பை வலியுறுத்தியுள்ளது.

Recommended Video

வைரமுத்து கருத்து முட்டாள்தனமானது! பெண்களை தரக்குறைவாக ஒப்பிடுவதா? Nachiyal Suganthi Interview

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry