மகாத்மா காந்தியை தேசத் தந்தையாக ஏற்க இயலாது! இந்தியாவுக்கு ஒரு தலைவர் இருக்க முடியாது! அடுத்த சர்ச்சைக்கு வித்திட்ட சாவர்கர் பேரன்!

0
13

மகாத்மா காந்தியை தேசத்தந்தை என நினைக்கவில்லை எனவும், இந்தியா போன்ற நாட்டுக்கு ஒரு தலைவர் மட்டும் இருக்க முடியாது என்றும் வி.டி. சாவர்கர் பேரன் ரஞ்சித் சாவர்கர் கூறியுள்ளார்.

VD SAVARKAR

ANI செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “இந்தியா போன்ற நாடுகளில் தேசப்பிதா என ஒருவர் மட்டும் இருக்க முடியாது. ஆயிரக்கணக்கான தலைவர்கள் காலப்போக்கில் மறக்கடிக்கப்பட்டு விட்டார்கள். ஆதலால், இந்த தேசத்தின் தந்தை மகாத்மா காந்திதான் என்று நான் நினைக்கவில்லை. இந்தியா போன்ற நாட்டுக்கு ஒரு தலைவர் மட்டும் இருக்க முடியாது. என்னைப் பொருத்தவரை தேசத்தந்தை என்ற கருத்துருவையே ஏற்க முடியாது, அதற்கு நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். வீர சாவர்கரை யாரும் தேசத் தந்தையாக்க வேண்டும் என நான் கேட்கவில்லை. ஏனென்றால் இந்த கருத்தே ஏற்க முடியாத ஒன்றுஎனத் தெரிவித்தார்.

முன்னதாக சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியிட்டு விழா டெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்றுப் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத், “1911ம் ஆண்டு முதன்முதலில் சாவர்கர் சிறைக்குச் சென்று 6 மாதங்களுக்குபின் முதல் கருணை மனுவை எழுதினார். அதன்பின் மகாத்மா காந்தி அறிவுரையின் படி அடுத்த கருணை மனுவை எழுதினார் என்று வரலாறு கூறுகிறதுஎனத் தெரிவித்தார். ராஜ்நாத் சிங்கின் கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனபாஜக வரலாற்றை திரித்து எழுத முயற்சிப்பதாகவும் அக்கட்சியினர் குற்றம்சாட்டினர்.

Also Read:- காந்தி சொல்லித்தான் பிரிட்டிஷ் அரசுக்கு சாவர்க்கர் கருணை மனு அளித்தார்! ராஜ்நாத் சிங் கருத்தால் வெடித்தது சர்ச்சை!

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry