சென்னையில் பெட்ரோல் விலை 102ஐக் கடந்த நிலையில், கடலூரில் டீசல் விலை லிட்டர் 100ஐத் தண்டி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள், வாகன உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் முதலே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மள, மளவென உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. பெட்ரோல் விலை வரலாற்றில் முதன்முறையாக லிட்டருக்கு ரூ.100க்கு மேல் சென்றது. இதேபோல், தமிழகத்தில் முதன்முறையாக டீசல் விலையும் ரூ. 100ஐக் கடந்துள்ளது. தொடர்ந்து உயரும் பெட்ரோல் விலையால், அன்றாடம் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் கடும் தவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இதேபோல், டீசல் விலை அதிகரிப்பால், பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்ந்து, ஏழை, நடுத்தர குடும்பத்தினர் வெகுவாக பாதித்து வருகின்றனர்.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சென்னையை பொறுத்தவரை பெட்ரோல் லிட்டருக்கு 31 காசும், டீசல் லிட்டருக்கு 34 காசும் உயர்ந்துள்ளது. அதன்படி நேற்று 101.79-க்கு விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல், இன்று லிட்டர் ரூ.102.10 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், ஒரு லிட்டர் டீசல், இன்று ரூ. 97.59 ஆக உயர்ந்துள்ளது. கடலூர் குமராட்சி பகுதியில் டீசல் ஒரு லிட்டர் ரூ. 100.29-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Petrol Price in Tamil Nadu – last 7 days
DATE |
PETROL PRICE / LITRE |
CHANGE |
14 October 2021 |
₹ 102.10 |
₹ 0.31 |
13 October 2021 |
₹ 101.79 |
₹ 0 |
12 October 2021 |
₹ 101.79 |
₹ 0 |
11 October 2021 |
₹ 101.79 |
₹ 0.26 |
10 October 2021 |
₹ 101.53 |
₹ 0.26 |
09 October 2021 |
₹ 101.27 |
₹ 0.26 |
08 October 2021 |
₹ 101.01 |
₹ 0.26 |
07 October 2021 |
₹ 100.75 |
₹ 0 |
Source – https://www.petroldieselprice.com/Tamil-Nadu-petrol-price
கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலையை விட, 10 முதல் 20 காசுகள் வரை டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால், தமிழகத்தில் முதன்முறையாக டீசல் விலை 100-ஐ கடந்து விட்டது. இது தவிர, 25 மாவட்டங்களில் டீசல் விலை 97க்கும் அதிகமாக உள்ளது. மாநிலத்தில் குறைந்தபட்சமாக சென்னையில் 97.93-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தொடர்ந்து அதிகரித்து வரும் டீசல் விலை உயர்வால், கனரக வாகன உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே, புதுப்பித்தல் கட்டணம் அதிகரிப்பு, சுங்க கட்டண வசூல் உயர்வு என லாரி தொழில் தடுமாற்றங்களை சந்தித்து வரும் நிலையில், தற்போது டீசல் விலை உயர்வும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சரக்கு வாகனங்களின் வாடகை உயர்த்தப்பட்டால், விலைவாசியும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry