சனாதனத்தை எதிர்க்கவே I.N.D.I. கூட்டணி! சனாதன எதிர்ப்புப் பிரச்சாரம் செய்ய I.N.D.I. கூட்டணியில் பிரச்சாரக் கமிட்டி! உண்மையை ஒப்புக்கொண்ட திமுக!

0
45
Minister Ponmudi spoke at Sanatan Dharma Eradication Conference

திமுக துணை பொதுச்செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி, சனாதனத்தை எதிர்ப்பதுவே I.N.D.I. கூட்டணியின் முதன்மையான நோக்கம் என்று, அண்மையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த இடதுசாரி அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் செப்டம்பர் 1-ந் தேதி, சென்னையில் காமராஜர் அரங்கத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, “சனாதன தர்மத்தை எதிர்க்கும் சித்தாந்தம், I.N.D.I. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கிடையேயான வேறுபாடுகளைத் தாண்டி, நோக்கமாக உள்ளது.

Also Read : சனாதனத்தை HIV, தொழுநோயுடன் ஒப்பிட்டு மீண்டும் சர்ச்சைப் பேச்சு! உதயநிதியை காப்பாற்ற ஆ. ராசா-வை களமிறக்கிய திமுக!

“ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் மூலம், சனாதன தர்மத்தை எதிர்க்கும் எங்கள் கொள்கை… I.N.D.I.A… இங்குள்ள எங்கள் நண்பர்கள் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளனர்… இந்த I.N.D.I.A என்பது சனாதன தர்மத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட கூட்டணி. நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் சனாதன தர்மத்தை எதிர்ப்பதில் யாருக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இந்தக் கூட்டணியில் உள்ள அனைவரும் சமத்துவம், சிறுபான்மையினரைப் பாதுகாத்தல், ஆண், பெண் சமத்துவம் ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும். சனாதனத்துக்கு எதிரான பிரச்சாரம் செய்ய I.N.D.I. கூட்டணி கமிட்டி அமைத்துள்ளது” என்று பொன்முடி பேசினார்.

முன்னதாக இந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித் தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் பணி ஆகும்,” என்று தெரிவித்தார். முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ. ராசா, சனாதன தர்மத்தை ஹெச்.ஐ.வி. மற்றும் தொழுநோயுடன் ஒப்பிட்டுப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

Also Read : பாஜகவுக்கு பலம் சேர்க்கும் உதயநிதியின் ‘சனாதன’ கருத்து! I.N.D.I. கூட்டணியில் தனிமைப்படுத்தப்பட்ட திமுக!

திமுக அங்கம் வகிக்கும் I.N.D.I. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சிவசேனா (UBT), ஆம் ஆத்மி உள்ளிட்ட முக்கிய கட்சிகள், உதயநிதியின் சனாதன தர்மம் குறித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், கண்டனத்தையும் பதிவு செய்தன. திமுகவின் கருத்துக்கும் I.N.D.I. கூட்டணிக்கும் சம்பந்தமில்லை என்றும் அக்கட்சித் தலைவர்கள் கூறியிருந்தனர்.

ஆனால், I.N.D.I. கூட்டணியே சனாதன தர்மத்தை எதிர்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது, சமூக ஊடகங்களில் இதுதொடர்பான பிரச்சாரத்தை மேற்கொள்ள I.N.D.I. கூட்டணி சார்பில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பொன்முடி கூறியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. உதயநிதியின் கருத்துக்களுடன் தங்கள் வேறுபடுவதாக I.N.D.I. கூட்டணி கட்சிகள் அதிருப்தி வெளிப்படுத்திய நிலையில், அமைச்சர் பொன்முடியின் வீடியோ வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry