இனியாவின் புது கெட் அப்! ‘தீரன்’ கார்த்தியை மிஞ்ச தீவிரப் பயிற்சி! திடீர் ‘ERROR’ஆல் திருப்பம்! 

0
87

பிரபல நடிகை இனியா போடப்போகும் புது கெட் அப் தமிழ்த் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘தீரன் அதிகாரம் ஒன்றுகார்த்தியை மிஞ்சும் வகையில் அவர் எடுக்கும் பயிற்சி, அடடா ரகமாக இருக்கிறது.

ராஜஸ்தானில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவிஎரர்என்கிற திரைப்படத்தை திலகா ஆர்ட்ஸ் S.T. தமிழரசன் தயாரிக்கிறார். GP கார்த்திக் ராஜா திரைக்கதை எழுதி இயக்குகிறார். ERROR படம் பற்றி வேல்ஸ் மீடியா சார்பில் கார்த்திக் ராஜாவிடம் பேசியபோது, சில முன்னணி தொலைக்காட்சிகளின் செய்தி மற்றும் புரோகிராம் பிரிவில் விஷுவல் எடிட்டராக பணிபுரிந்துள்ளேன். திரைத்துறை மீதான காதலால்,  பேய் இருக்க பயமேன்திரைப்படத்தின் இயக்குநரும், ஹீரோவுமான கார்த்தீஸ்வரனிடம் இணை இயக்குநராக பணிபுரிந்தேன். அந்தப்படத்தின் எடிட்டராகவும் பணியாற்றினேன்.

]தற்போது, ராஜஸ்தானில் நடந்த சம்பவத்தைத் தழுவி நான் எழுதிய திரைக்கதையை படமாக்க உள்ளேன். ERROR திரைப்படம் கிரைம் த்ரில்லர் கதையாகும். மனிதத் தவறால் நிகழும் சம்பவத்தை வைத்து கதை நகர்வதால், ERROR என்று படத்துக்கு பெயரிட்டுள்ளோம். கிரைம் த்ரில்லர் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் திரைக்கதை எழுதபட்டுள்ளது. திரைக்கதைதான் படத்தின் முதல் ஹீரோ

தமிழ், மலையாளம் என இருமொழிகளில் கலக்கி வரும் நடிகைஇனியாலீட் ரோல் செய்கிறார். அவரையொட்டியே திரைக்கதை நகரும். முதல் முறையாக கிரைம் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அவர் நடிக்கிறார். காக்கி யுனிஃபார்ம் அணிவதால், அதற்கேற்ப அவர் தம்மை தயார்படுத்திக்கொண்டு வருகிறார். பெண் காவல் அதிகாரிகளின் உடல்மொழி, அதிகார தோரணை, விசாரணை செய்யும் பாங்கு, கிரைம் சீனில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் போன்ற அனைத்தையும், பெண் காவல் அதிகாரிகள் வழிகாட்டுதலில் அவர் பயிற்சி எடுத்து வருகிறார். எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றார் போல நடிப்பது இனியாவுக்கு கைவந்த கலை. எனவே இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் இனியாவுக்கு திருப்புமுனை தருவதாக இருக்கும்.

ERROR படத்துக்கு பிரேம்ஜி இசை அமைக்கிறார். பிரேம்ஜி என்றவுடனேயே நமக்கு அவரது பாடி லாங்குவேஜ், காமெடிதான் நினைவுக்கு வரும். தற்போது அவர் இசையிலும் கவனம் செலுத்துகிறார்.  நகைச்சுவை நடிகர், பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், ‘தமிழ் ராக்கர்ஸ்படம் மூலம் ஹீரோ அவதாரம் என பன்முகம் கொண்ட பிரேம்ஜி அமரனுக்கு, எங்கள் படக்குழுஇசைத் திருடன்என அடைமொழி கொடுத்துள்ளது.   ராட்சசன் திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.வி. சங்கரிடம் அசோசியேட்டாக பணிபுரிந்த விவேக், இந்தப்படத்தின் கேமராமேனாக பணியாற்றுகிறார். சித்ரா கார்த்திக் எடிட்டராக அறிமுகமாகிறார்.

கதையின் நாயகனாகபேய் இருக்க பயமேன்கார்த்தீஸ்வரன் நடிக்கிறார். மேலும் சில பிரபல நடிகர்களும் படத்தில் இணைகின்றனர். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையாரின் அருளாசியுடன் கடந்த 9-ந் தேதி சென்னையில் படத்துக்கான பூஜை போடப்பட்டது. அடுத்த மாதம், முதல் வாரம் படப்பிடிப்பை துவங்குகிறோம். சென்னை மற்றும் கொடைக்கானலில் படப்படிப்பு நடக்க உள்ளது. ERROR திரைப்படம் ரசிகர்களின் ஆதரவுடன் தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எங்கள் படக்குழு உறுதியாக நம்புகிறதுஎன்று GP கார்த்திக் ராஜா கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry