உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் அறிமுகமானது ஐபோன் 13 சீரிஸ்! இந்தியாவில் குறைந்தபட்ச விலை ரூ.70,000!

0
440

ஆப்பிள்நிறுவனத்தின் ஐபோன் 13 மாடல்  4 வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை வாங்குவதற்கான முன்பதிவு வரும் 17ம் தேதி தொடங்குகிறது.  வரும் 24ம் தேதியில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு செல்போன்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தொலைத் தொடர்பு கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஐபோன் 13, ஐபோன் 13 மினி,  ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஆகிய 4 மாடல்களை ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ., டிக் குக் மற்றும் அவரது குழுவினர் அறிமுகப்படுத்தினர். அதேபோல் ஐ பேட் (9ம் தலைமுறை), ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 ஆகியவற்றையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐபோன் 13 மாடல்களில் ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட் கொண்டிருக்கிறது. ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி ஆகியவை முறையே 128 ஜி.பி, 256 ஜி.பி, 512 ஜி.பி மெமரியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 13 ப்ரோ மற்றும் 13 ப்ரோ மேக்ஸ்  ஆகியவவை 1 டி.பி. மெமரி வரையிலான மாடல்களை கொண்டுள்ளது. அனைத்து மாடல்களிலும் முன்பக்கம் கேமரா 12 மெகா பிக்சல் ஆகும்.

Also Read: Portrait Video Mode! ProRes தரத்தில் வீடியோ எடுக்கும் வசதி! அட்டகாசமாக மார்க்கெட்டில் நுழைகிறது ஐபோன் 13!

ஐபோன் 13 மற்றும் 13 மினி ஆகிய மாடல்களில் டூயல் 12 எம்பி வைடு மற்றும் அல்ட்ரா வைடு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 13 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களில் 12 எம்.பி. டெலிபோட்டோ வைடு மற்றும் அல்ட்ரா வைடு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் புகைப்படங்களை துல்லியமாக எடுக்க முடியும். அதிகபட்சமாக 28 மணிநேரம் வரை வீடியோக்களை தொடர்ச்சியாக பார்க்க முடியும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.  புதிய மாடல்கள் அனைத்தும் 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை(உத்தேசமாக), ஐ போன் 13 மினி  128 ஜி.பி.- ரூ.69,900யும், ஐ போன் 13 மினி 256 ஜி.பி. – ரூ.79,900யும், ஐ போன் 13 மினி 512 ஜி.பி. -ரூ.99,900யுமாக இருக்கலாம்.

ஐ போன் 13 128 ஜி.பி.- ரூ.79,900, ஐ போன் 13 256 ஜி.பி.- ரூ.89,900, ஐ போன் 13 512 ஜி.பி.- ரூ.109,900 ஆக விற்கப்படலாம் என உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளது.

ஐ போன் 13 ப்ரோ 128 ஜி.பி.- ரூ.1,19,900, ஐ போன் 13 ப்ரோ 512 ஜி.பி. – ரூ.1,49,900, ஐ போன் 13 ப்ரோ 1 டி.பி. – ரூ.1,69,900 என விலை இருக்கக்கூடும்.

ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் 128 ஜி.பி. – ரூ.1,29,900, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் 512 ஜி.பி. – ரூ.1,58,900, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் 1 டி.பி.- ரூ.1,79,900 ஆக விற்கப்படலாம்.

ஐபோன் 13 மாடல்களுக்கான முன்பதிவு வரும் 17ம் தேதி தொடங்குகிறது.  வரும் 24ம் தேதி முதல் செல்போன்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry