ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை தொடக்கம்! வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய அம்சங்கள் என்னென்ன?

0
171

S1 மற்றும் S1 Pro என இரண்டு வேரியன்ட்களில், முழுக்க முழுக்க ‘Make in Tamilnadu’ ஆக கிருஷ்ணகிரி தொழிற்சாலையில் ரெடியாகி வருகிறது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். மின்சார வாகன சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஓலா மின்சார ஸ்கூட்டர் புதன் கிழமை(08/09/2021) விற்பனைக்கு வருகிறது.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில், S1 மாடலின் விலை ரூ.99,999-லும், S1 Pro-வின் விலை ரூ.1,29,999 லும் தொடங்குகிறது. மானியங்களைக் கொண்ட மாநிலங்களில், ஓலா எஸ்-1 பல பெட்ரோல் ஸ்கூட்டர்களை விட மிகவும் மலிவு விலையில் கிடைக்கும். உதாரணமாக, டெல்லியில், மாநில மானியத்திற்குப் பிறகு, எஸ் 1 ஸ்கூட்டரின் விலை 85,099 ரூபாயாகவும், குஜராத்தில் 79,999 ரூபாயாகவும் உள்ளது

Also Read: அசத்தலாக வரும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! ரூ.499க்கு முன்பதிவு! ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கி.மீ. ஓட்டலாம்

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒரே நாளில் 1 லட்சம் ஸ்கூட்டர் புக் ஆனது பெரிய சாதனையாக கருதப்படுகிறது. நாளை முதல், அதாவது செப்டம்பர் 8 முதல் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வருகிறது. ஹோம் டெலிவரி செய்யப்பட உள்ள இந்த ஸ்கூட்டரை வாங்குவதற்கு எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கென்று தனியாக டீலர்ஷிப்களோ, ஷோரூம்களோ கிடையாது. ஓலாவின் வலைதளத்தில் சென்று S1 – S1 Pro ஸ்கூட்டர்களையும் தேர்ந்தெடுத்து, உங்கள் முகவரி போன்ற விவரங்களோடு 499 ரூபாய் கட்டினால், சீனியாரிட்டி அடிப்படையில் ஹோம் டெலிவரி செய்யப்படும். (முன்பதிவு செய்ய https://olaelectric.com/#)

இதுவரை புக் செய்தவர்கள், ஸ்கூட்டருக்கான பாக்கித் தொகையை செலுத்தி, உங்கள் ஆர்டிஓ அலுவலக விவரங்களை முடித்து, பைக் டெலிவரியின் முழுமையான ப்ராசஸை முடித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் டெலிவரி செய்யப்படும். அநேகமாக அக்டோபர் 1 முதல் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உங்கள் வீடு தேடி வர ஆரம்பிக்கலாம்.

வாடிக்கையாளர்கள் தவணை முறையில் வாங்குவதற்கு வசதியாக HDFC, ICICI, Kotak Mahindra Prime, Tata Capital, Bank of Baroda, Axis Banks, Yes Bank, IDFC First Bank, IndusInd, AU Small Finance, Jana Small Finance போன்ற வங்கிகள் மற்றும் பல நிதி நிறுவனங்களுடன் ஓலா நிதிப் பிரிவு ஒப்பந்தம் செய்திருக்கிறது..

S1 மாடலுக்கான மாதத் தவணை ரூ.2999–ல் ஆரம்பிக்கிறது. S1 Pro மாடலுக்கான மாதத் தவணை ரூ.3199–ல் தொடங்குகிறது. இனிஷியல் தொகை ரூ.25,000–த்தில் இருந்து நிதி நிறுவனங்களுக்கு ஏற்றபடி மாறுகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் விரும்பிய நிதி நிறுவனங்களிலோ, வங்கிகளிலோ தவணை முறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மொத்தம் 10 கலர்களில் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் புக் செய்யும்போதே தங்களுக்கான கலர் ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ‘அவசரப்பட்டு இந்த கலரைத் தேர்ந்தெடுத்துட்டோமேஎன்று கவலைப்பட வேண்டியதில்லை. டெலிவரி தேதிக்குச் சில நாள்கள் முன்பு கலர் ஆப்ஷனை மாற்றிக் கொள்ள முடியும். இப்போதைக்கு சர்வீஸும் டோர் ஸ்டெப்பில்தான்

ஓலா எஸ் 1 ஸ்கூட்டரில் Battery Management System (BMS) என்ற நவீன அம்சமும் உள்ளது.  Ola S1 ஸ்கூட்டரில் 2.98kWh lithium-ion battery-ம், Ola S1 Pro ஸ்கூட்டரில் 3.97kWh lithium-ion battery-பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களில் இதுபோன்ற திறன்மிக்க பேட்டரி பொருத்தப்படுவது இது முதல்முறையாகும். Ola S1 மற்றும் S1 Pro மாடல்களின் பேட்டரிக்கு மூன்று வருட வாரன்ட்டி கொடுக்கப்படுகிறது.  Ola S1  ஸ்கூட்டருக்கான வாரன்ட்டியாக, மூன்று வருடம் அல்லது 40,000 கிலோ மீட்டர் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry