திராவிடர்கள் என்றால் பிராமணர்களே! தமிழர் இனப்பெயரை அழிக்கும் முயற்சி இனியும் பலிக்குமா? ஆதாரங்களுடன் விளக்கம்!

0
827

வரலாறே இல்லாததிராவிடம்என்பதை வைத்து, தமிழ் இனத்தை இன்னும் எவ்வளவு நாட்களுக்குத்தான் மறைப்பார்கள் என்ற குமுறல் பரவலாகக் கேட்கிறது. திராவிடம் என்பதே சமஸ்கிருதச் சொல்லாகும். மனுஸ்மிருதியில் இருந்து கால்டுவெல்தான் இந்தச் சொல்லை வழக்கத்துக்கு கொண்டுவந்தார்.

கர்நாடகாஸ் தெலிங்கா திராவிடா மகாராஷ்ட்ரகா குர்ச்சராஷெதி பஞ்ச திராவிடா விந்திய தக்ஷினே

சரஸ்வதா கான்யகுப்ஜா கௌடா உத்கலமிதிலா பஞ்ச கௌடா விந்தியோதித்ர்வாஸின்

– சம்ஸ்கிருதப் புலவரான கல்கணன் எழுதிய இராஜதரங்கிணி. (12-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது) இதன்படி கர்நாடகம், தெலிங்கம், திராவிடம் மகாராட்டிரம் குர்ச்சரம் (குஜராத்) பகுதி பிராமணர்கள் பஞ்ச திராவிடர் ஆவர். இவர்கள் விந்திய மலை தெற்கில் குடியேறியவர். விந்திய மலை வடக்கில் உள்ளவர் பஞ்ச கௌடர் ஆவர். இராஜதரங்கிணி, பிராமணர்களை திராவிடப் பிராமணர் எனக்குறிக்காமல்திராவிடா“, “பஞ்ச திராவிடாஎன்னும் இனப்பெயராகவே குறிக்கிறது. எனவே பண்டையகால பெயர் திராவிடர் என்பதே.

தொல்காப்பியத்துக்கு உரை எழுதியவர்களில் ஒருவரான, 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்ச தெய்வச் சிலையார் குறிப்பிடுவதன் அடிப்படையில், வடுகம், தெலிங்கம், கருநாடகம், துளவம், கொங்கணம் போன்ற பகுதிகளில் இருந்த பிராமணரே திராவிடர் எனவும், அந்நாடுகளே திராவிட நாடுகள் என்பதும், அங்கு பேசப்பட்டவையே கால்டுவெல் வருவதற்கு முன்பு திராவிடம் என்னும் மொழியாக இருந்ததும் தெளிவாகிறது. பஞ்ச திராவிடரின் நாடுகள் வேங்கட நாட்டின் (வேங்கடம் என்பது வேங்கட நாட்டின் வட எல்லை. திருப்பதியையும் தாண்டி சிறிது தூரம் இருக்கும்.) வடக்கில் இருப்பதே பஞ்ச திராவிட நாடுகள் என்பதை தெய்வச் சிலையார் தெளிவாக்கியுள்ளார்.

1914-ல் ஸ்ரீனிவாச ஐய்யங்கார் என்பவர் எழுதிய “Tamil Studies” எனும் நூலில், ‘பார்ப்பனர் அல்லாத தமிழர்கள் தங்களை ஒருபோதும் திராவிடர்கள் என்று கூறிக்கொள்வதில்லை. ஆதிசங்கரர் சமஸ்கிருதத்தில் எழுதிய செளந்தர்ய லஹரியில், பிராமணரான திருஞானசம்பந்தரைதிராவிட சிசுஎன்றுதான் குறிப்பிடுகிறார். பிராமண பழங்குடிகளே பஞ்ச திராவிடர்கள் ஆவர். மகாஜனம் என்று அழைத்துக்கொள்ளும் இந்தியாவில் இருக்கும் தமிழ் பிராமணர்கள் திராவிடர்கள் என்றே அறியப்படுகிறார்கள்என்று எழுதியுள்ளார்.

ஆழ்வார்கள் பாசுரங்கள் திராவிடவேதம் என்றே குறிக்கப்படுகிறது. கர்நாடகாவில் இருக்கும் பிராமணர்கள் தற்போதும் தங்களை திராவிடர்கள் என்றே கூறிக்கொள்கின்றனர். பிராமிண் திராவிட மேட்ரிமோனி இப்போதும் செயல்பட்டு வருகிறது. எனவே தென்னாட்டு பிராமணர்களுக்கு உரிய பெயர்தான் திராவிட என்பது தெள்ளத் தெளிவாகிறது.    

Source: (https://www.brahminmatrimony.com/brahmin-dravida-grooms?fbclid=IwAR1nkxgGF7O_SNYZP3hi-MMaF1ofNPfOI26fHDUZIEqYuLlxVcwRfyZQN-o).

கால்டுவெல் செய்த மோசடித் தனத்தைப் பற்றி, ஈழத்து அறிஞர் ஐசக் தம்பையா எழுதியுள்ள Psamls of a Saiva Saint என்ற புத்தகத்தில் இப்படிக் கூறுகிறார், “பிஷப் கால்டுவெல்லின்திராவிடஎன்ற வார்த்தையின் பயன்பாடு உண்மையில் நான்கு தெற்கு பிராந்திய மொழிகளைக் குறிக்கிறது. அது தென் பிராந்திய மக்களின் இனத்தை திராவிடர்கள் என்று குறிப்பிடவில்லை. இது வசதியாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது”.

தமிழன், தன்னைதிராவிடன்அதாவதுதிரிவடுகன்அல்லது தெலுங்கன் என்று சொல்வது இழிவாகும்! அவமானமாகும்! என தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் கூறியுள்ளார். மேலும், நம் தமிழ்ப் புலவர்கள் எழுதிய எந்த இலக்கியத்திலும்திராவிடன்” “திராவிடநாடுஎன்ற சொற்களே இல்லை. மிக அண்மைக் காலத்தில் அந்நியர்களால் எழுதப்பட்ட நூல்களில் தான்திராவிடம்என்ற வடசொல் காணப்படுகிறது. நம் தமிழ் இலக்கியங்களில் இல்லவே இல்லை! என்பதையும் அவர் பதிவிட்டுள்ளார்.

Source: https://en.wikipedia.org/wiki/Dravidulu

திராவிடர் என்றால் அதில் பார்ப்பனர்கள் சேரமாட்டார்கள்; தமிழர் என்றால் தமிழ் எங்களுக்கும் தாய்மொழி என கூறிக்கொண்டு பார்ப்பனர்கள் உள்ளே வந்துவிடுவார்கள் என ஈ.வெ. ராமசாமி நாயக்கர் கூறினார். ஆனால், ஆரியதிராவிட போராட்டத்திற்கு  திக, திமுகவினர் இதுவரையில் ஒரு சான்றைக் கூட கொடுத்ததாகத் தெரியவில்லை. எனவே, பார்ப்பனர்கள்தான் திராவிடர்கள் என்பது தெரிந்தும், தமிழ் மொழி, இன அடையாள மறைப்புக்காகவே ராமசாமி இவ்வாறு கூறியிருப்பார் என நம்பப்படுகிறது

சங்க இலக்கியங்களில்திராவிடஎன்ற வார்த்தையே கிடையாது என்று தமிழ் தேசிய பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பல தளங்களிலும் தெளிவாகப் பதிவு செய்து வருகிறார். எனவே எதன் அடிப்படையில் தமிழர்களை திராவிடர்கள் என அடையாளப்படுத்துகிறார்கள்? என்ற கேள்வி எழுகிறது.  ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநில மக்கள் மொழிவாரியாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும்போது, தமிழ்நாடு மட்டும், மொழிஇன அடையாளத்தை தொலைக்கச் செய்யது, திராவிடம் என்ற கருத்தியலில் திணிக்கப்படுகிறது.

தாய்மொழி தமிழ் அல்லாதவர்களால்தான், தமிழ்நாட்டில் இத்தகைய கருத்தியல் வலிந்து திணிக்கப்படுவதாக புகார் கூறப்படுகிறது. தமிழர் என்ற தனித்தன்மையுடன் கூடிய இனப்பெயர் கூடாது என்பதை மறைப்பதற்கான முயற்சி ஒரு நூற்றாண்டாகவே நடந்து வருகிறது. தமிழ் தாய்மொழி அல்லாதவர்கள், தங்களை தமிழர்கள் என உதட்டளவில் அடையாளப்படுத்திக் கொண்டு, தமிழ் மன்னர்கள் மீதும் சேற்றை வாரி இறைப்பதை கேட்க முடிகிறது. அதன் தொடர்ச்சியாகதிருதமிழம்என்பதே திரிந்துதிராவிடம்ஆனது என்பதொரு புதுமையான விளக்கத்தை பலர் முன்னெடுக்கின்றனர்.

.வெ. ராமசாமி நாயக்கர் தோற்றுவித்த திராவிடம் என்பது, இந்து விரோதம், பிராமண எதிர்ப்பு (பிராமணர்கள் இந்து மதம், சாதி அமைப்பு மற்றும் சமஸ்கிருதத்தை தாங்கிப்பிடிக்கிறார்கள்), இதனூடே, இந்தி எதிர்ப்பு (சமஸ்கிருதத்தின் பிரதிநிதியாக இந்தி கருதப்படுகிறது) ஆகியவைதான்.   திமுகவும் இதனை முழுமையாக வரித்துக்கொண்டுள்ளது. இந்தப் பிரச்சாரமும் திமுக ஆட்சியில் அமர உதவிற்று. அதன் தொடர்ச்சியாக தமிழ் கல்வெட்டுகளை திராவிட மொழி கல்வெட்டு என தமிழக அரசு அடையாளப்படுத்தியதை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கண்டித்தது நினைவுகூரத்தக்கது.

Also Read: தமிழ் கல்வெட்டுகளை திராவிட மொழி கல்வெட்டு எனக் கூறுவதா? அடையாளத்தை மறைப்பதா எனவும் ஐகோர்ட் கேள்வி!

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry