ஐ போன் விலை இவ்வளவு கம்மியா? புதிய SE மாடல் அறிமுகமாகிறது! மேம்பட்ட பிராசஸர்கள், 5ஜி வசதி!

0
402
VELS MEDIA

ஆப்பிள் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய SE மாடலின் விலை, தற்போது சந்தையில் விற்கப்படும் SE மாடலை விட குறைவாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் மாதம் iPhone SE 3 மற்றும் பிற சாதனங்களை அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம் லோயர் மற்றும் மிட் ரேன்ஜ் பிரிவில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. ஆண்ட்ராய்ட் பயனாளிகளை கவரும் நோக்கிலேயே விலை குறைவாக, மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் புதிய ஐபோன் மாடல்கள் அறிமுகமாக உள்ளது. விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் 2022 ஐபோன் SE மாடல் விலை 300 டாலர்கள் அதாவது, இந்திய மதிப்பில் ரூ. 22,516 என நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. தற்போது சந்தையில் விற்கப்படும் ஐபோன் SE மாடலின்  விலை 399 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 29,947 ஆகும்.

SE 2020 க்கு அடுத்ததாக புதிய மாடல் இருக்கும், இது ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் மலிவு மற்றும் சிறிய ஐபோன் ஆகும். வரவுள்ள புதிய மாடலில் 5ஜி வசதி, 3GB RAM மற்றும் சிறப்பான பேட்டரி பேக்கப் வழங்கப்படுகிறது. குறைந்த விலை ஐபோன் SE மாடல் மூலம் மிட்-ரேன்ஜ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்கள் மற்றும் 300 மில்லியன் பழைய ஐபோன் பயனர்களை மீண்டும் ஈர்க்க ஆப்பிள் திட்டமிடுகிறது. 128 GB ஸ்டோரேஜ் அடிப்படையாக இருக்கலாம்.

புதிய ஐபோன் SE 3 மாடலில் ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட், இருபுறங்களிலும் கிளாஸ் பாதுகாப்புடன் அலுமினியம் சேசிஸ், ஹோம் பட்டனில் டச் ஐ.டி. சென்சார், பின்புறம் 12 மெகா பிக்சல் கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட புகைப்பட அனுபவத்திற்காக இது வெளிப்புற X60M 5G பேஸ்பேண்ட் சிப்பைக் கொண்டிருக்கும். இரவு மோடை சப்போர்ட் செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய தகவல்களின் படி இந்த மாடல் மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிகிறது. எனினும், இதுபற்றி ஆப்பிள் சார்பில் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry