துரத்தியடிக்கப்பட்ட ஜோதிமணி எம்.பி.! விருந்துக்கா வந்தேன் என ஆவேசம்! கரூர் திமுக அலுவலகத்தில் பரபரப்பு!

0
360
கரூர் எம்பி ஜோதிமணி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கட்சிகள் இடையே சீட் பங்கீடு பேச்சு வார்த்தையின்போது, கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை திமுக-வினர் துரத்தியடித்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இடங்கள் பங்கீடு இறுதிகட்ட வார்த்தை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் திமுக கரூர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, திமுகவினர் தன்னை வெளியேற சொன்னதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதி எம்.பி. ஜோதிமணி குற்றச்சாட்டு தெரிவித்து கொந்தளித்துள்ளார்.

திமுக அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த அவர், ‘உங்க ஆபிசுக்கு வந்து இருக்கேன். எப்படி நீங்க வெளிய போ அப்படினு சொல்லலாம். விருந்துக்கா வந்துருக்கேன். மரியாதை இல்லாம பேசுறீங்க. நான் என்ன இவங்க வீட்டுக்கா வந்து இருக்கேன். வெளியே போன்னு சொல்றதுக்கு, இது தான் திமுகவில் பெண்களுக்கு தரும் மரியாதையா? என்று கொந்தளித்தார். பின்னர், அருகில் இருந்த காங்கிரஸ் கட்சியினர், ஜோதிமணி எம்பியை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்.

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியிடம் ஆலோசிக்காமல் அவர்களாகவே தொகுதி பங்கீடு குறித்து பேசிக் கொண்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த ஜோதிமணி திமுகவினரிடம் முறையிட்டுள்ளார் என கூறப்படுகிறது. தொடர்ந்து திமுக நிர்வாகிகள் ஒருமையில் பேசி எம்.பி., ஜோதிமணியை வெளியேற சொல்லி கூச்சலிட்டு உள்ளனர். திமுக கட்சி அலுவலகம் முன்பு ஆவேசத்துடன் ஜோதிமணி பேசியதை நிருபர்கள் படம் பிடித்த போது திமுகவினர் எடுக்க விடாமல் தடுத்தனர். இந்த சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry