ஆவினில் குழந்தைத் தொழிலாளர்கள்? ஊதியம் வழங்கவில்லை எனப் போராட்டம்! அமைச்சர் விளக்கத்தால் பரபரப்பு!

0
162
Child Labours in Aavin?

சென்னை அம்பத்தூரில் அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவினில், சிறார்கள் வேலையில் அமர்த்தப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, ஐஸ்க்ரீம் பேக்கேஜிங் பிரிவில் 30-க்கும் மேற்பட்ட சிறார்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், கடந்த இரண்டு மாதங்களாக அவர்கள் செய்த பணிக்கு ஊதியம் வழங்காததால் போராட்டத்தை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ஆவின் வட்டாரத்தில் விசாரித்தபோது, ’கோடைக்காலத்தில் ஐஸ் விற்பனை அதிகரிக்கும்’ என கணிக்கப்பட்டு அதன் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டது. இதனால், உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், விடுமுறை நாள்கள் என்பதால் பேக்கேஜிங் பிரிவில் பள்ளிச் சிறார்களைப் பயன்படுத்தியிருப்பதாகத் தெரியவருகிறது. ஆவின் ஒப்பந்த நிறுவனம் ஒன்று, 12-ம் வகுப்பு படித்த சிறுவர், சிறுமிகளைச் சிறார் தொழிலாளர்களாகப் பணியில் அமர்த்தியதாகக் கூறப்படுகிறது.

Also Read : ‘பள்ளிக்கல்வி ஆணையரகம்’ என்பதை உடனடியாக நீக்குங்கள்! தமிழக அரசுக்கு ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்!

தற்போது ஒப்பந்தம் எடுத்திருக்கும் நிறுவனம், குறைவானவர்களை வேலைக்கு வைத்துக்கொண்டு, அரசிடம் முழுத் தொகையைப் பெற்றதாகக் குற்றச்சாட்டு இருக்கிறது. ஆகவே, ஆட்கள் பற்றாக்குறை, செலவைக் குறைக்க, சிறார் தொழிலாளர்களை நியமித்திருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. எனினும், இதைத் தீவிரமாகக் கண்காணித்திருக்க வேண்டியது அரசின் கடமைதானே” என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.

இரண்டு மாதங்களாக செய்த பணிக்கு ஊதியம் வழங்காததால் சிறார்கள் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
தங்களை ஒப்பந்தம் மூலம் ஆவினில் பணியமர்த்திய நிறுவனம், முறையான சம்பளம் வழங்கவில்லை என ஆவின் பண்ணை முன்பு கொளுத்தும் வெயிலில் சிறார்கள் போராட்டம் நடத்தியதன் மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இவர்கள் போராட்டம் நடத்தும் வீடியோ காட்சியானது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசு பொதுத்துறை நிறுவனத்திலேயே குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்தலாமா? எனப் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Also Read : நீதிமன்றத்திற்குள் புகுந்து எதிரியை சரமாரியாக வெட்டிய ரவுடி! கேள்விக்குறியாகும் சட்டம் ஒழுங்கு!

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சிறார்கள் போராடினார்கள் எனச் சொல்வது தவறு. சிறார் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபடவில்லை. கடந்த நாள்களில் நான் ஆய்வு மேற்கொண்டபோது ’சம்பளம் குறைத்து தரப்படுகிறது’, ’தாமதமாக சம்பளம் தரப்படுகிறது’ என்று மட்டும்தான் பிரச்னை சொல்லப்பட்டது. ஆனால், சிறார் தொழிலாளர்கள் வேலை செய்திருக்கின்றனர் என எந்தப் புகாரும் வரவில்லை. இது மிகைப்படுத்தப்பட்ட செய்தியே அன்றி வேறல்ல.

ஒப்பந்த நிறுவனம் மற்றும் அதிகாரிகளிடையே நடந்த சின்ன பிரச்னை காரணமாக இப்படிச் சிலர் திட்டமிட்டு இந்தச் சம்பவத்தை அரங்கேற்றியிருக்கின்றனர். இது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. விரிவான அறிக்கை விரைவில் வெளியாகும்” என்றார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry