ஓ.பி.எஸ்.க்கு ஆறுமுகசாமி ஆணையம் நோட்டீஸ்! வரும் 21-ம் தேதி ஆஜராக உத்தரவு!

0
81
VELS MEDIA

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம், ஓபிஎஸ், சசிகலா அண்ணன் மனைவி இளவரசி ஆகியோர், வரும் 21-ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான வழக்கில், விசாரணை நடத்த நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு இடைக்கால தடை விதித்திருந்தது. தற்போது 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இந்த வழக்கில் நேற்று விசாரணையை மீண்டும் தொடங்கியது. முதற்கட்டடமாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த அப்போலோ மருத்துவர்களிடத்தில் ஆறுமுகசாமி ஆணையம் நேற்று விசாரணை நடத்தியது. அதைத்தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக எய்ம்ஸ் மருத்துவர்களிடத்தில் விசாரணை நடைபெற்றது.

அப்போது, மருத்துவர் மதன்குமாரிடம் விசாரணை ஆணையத்தினர் குறுக்கு விசாரணை நடத்தினர். 2016 டிசம்பர் 4-ல் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்றும், உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது எனவும் மதன் குமார் கூறினார். இந்த விசாரணையில் கலந்துகொள்ளாத மருத்துவர்கள் வரும் 15-ம் தேதி ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

OPS

மேலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், சசிகலாவின் அண்ணண் மனைவி இளவரசிக்கும், வரும் 21-ம் தேதி ஆஜராக வேண்டும் என விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்காக சம்மன் அனுப்பப்பட்டிருந்தும் ஒருமுறை கூட ஓபிஎஸ் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry