மீண்டும் அதிமுக ஆட்சி! ஜெ. நினைவிடத்தை திறந்து வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூளுரை!

0
8

சென்னை, மெரினா கடற்கரையில் பிரமாண்டமாக கட்டப்பட்ட, ஜெயலலிதா நினைவிடத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், மீண்டும் அதிமுக ஆட்சி அமைய உறுதி ஏற்க வேண்டும் என்று நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அறிவுறுத்தினார்.

தமிழக அரசியலில், ஆளுமை மிக்க தலைவராக வலம் வந்தவர், ஜெயலலிதா. .தி.மு.., பொதுச் செயலராகவும், நான்கு முறை முதலமைச்சராகவும் இருந்து, பல சாதனைகள் படைத்தவர். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், 2016-ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மறைந்தார். அவரது உடல், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள, எம்.ஜி.ஆர்., நினைவிட வளாகத்தில், எம்.ஜி.ஆர்., சமாதிக்கு கிழக்கு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

ஜெயலலிதா நினைவிடம் கட்ட, 2018 மே, 7ம் தேதி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அதன்பின், 50 ஆயிரத்து, 422 சதுர அடி பரப்பளவில், பொதுப்பணித்துறை வாயிலாக, நினைவிடம் அமைக்கும் பணி துவக்கப்பட்டது. ஜெயலிலதா நினைவிடத்தில், மூன்று கட்டடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம், பீனிக்ஸ் பறவை தோற்றத்திற்குள் அமைந்துள்ளது. இடது பக்கத்தில் அருங்காட்சியகம், வலது பக்கத்தில் அறிவுசார் மையம் இடம் பெற்றுள்ளது.

நினைவிடத்தில், விலை உயர்ந்த கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இவற்றில், ‘மக்களால் நான்; மக்களுக்காக நான், அமைதி, வளம், வளர்ச்சிஆகிய, ஜெயலலிதாவின் பொன்மொழிகள் பொறிக்கப்பட்டுள்ளன. நினைவிட வளாகத்தில், புல்வெளி அமைக்கப்பட்டுள்ளது; ஏராளமான மலர் செடிகளும் நடப்பட்டுள்ளன. இரவில் நினைவிடம் ஜொலிக்கும் வகையில், வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த நினைவிடத்தை, இன்று காலை, 11:00 மணிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்..,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து, ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், “எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அ.தி.மு.வை வழிநடத்தியவர் ஜெயலலிதா. எதிரிகளாலும் பாராட்டப்பட்டவர். பெண்கள் பாதுகாப்புக்கு பல முன்னோடி திட்டங்களை கொண்டு வந்தவர். தமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர். முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் சட்ட போராட்டம் நடத்தி வெற்றி பெற்றார்.

இந்தியாவிலே அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதலமைச்சர் ஜெயலலிதா. சமூகநீதி காத்த வீராங்கனை அவர். அவருக்கு நினைவிடம் கட்டக்கூடாது என்று வழக்கு தொடுத்தவர் மு..ஸ்டாலின். தந்தை கருணாநிதிக்கு நினைவிடம் கட்டுவதற்காக அந்த வழக்குகளை வாபஸ் பெற்றவர் மு..ஸ்டாலின். வரும் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களிலும் வெற்றிபெற்று, தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம். அதிமுகவின் வெற்றியை ஜெயலலிதாவுக்கு சமர்ப்பணம் செய்வோம். அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதே பெண்களின் மனநிலைஎன்று கூறினார்

நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “ புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். அந்த நன்றி உணர்வுக்கு எடுத்துக்காட்டாகத்தான் நினைவிடம் திறக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா நினைவிடத்திற்கு வரும் போது அனைவருக்கும் வீரம் பிறக்கும். மக்களால் நான் மக்களுக்கான நான் என்ற குரல் இங்கே கேட்டுக்கொண்டிருக்கும்என்று தெரிவித்தார்அனைத்து மாவட்டங்களில் இருந்தும், கட்சி நிர்வாகிகள், பெரும் திரளாக நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry