மக்களை திட்டித் தீர்க்கும் ஆளுநரால், பின்னடைவை சந்திக்கும் புதுச்சேரி பா.ஜ.க.!

0
34

வரி கூட ஒழுங்காக செலுத்தாத, பொறுப்பற்ற தன்மை கொண்டவர்களாலேயே கோவிட்-19 வேகமாகப் பரவுகிறது என மக்களை சரமரியாக திட்டித் தீர்க்கும் ஆளுநர் கிரண்பேடியால் புதுச்சேரி பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தனது டிவிட்டர் பக்கத்தில் கிரண்பேடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சுமார் 1.30 நிமிடங்கள் நீளமுள்ள அதில், இந்தியாவில் கோவிட்-19 தொற்று குறித்து பேசியுள்ளார். இந்தியாவில், கோவிட் தொற்று வேகமாகப் பரவுகிறது? மக்கள் சட்டத்தை மதிக்காததுதான் இதற்குக் காரணம்.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு என்னவாயிற்று? மதுக்கடை வாசலில் மக்கள் ஒரு மைல் தூரத்துக்கு க்யூ கட்டி நிற்கிறார்கள். ஒருவர் மீது ஒருவர் இடித்துக்கொண்டு மதுபாட்டில்களை வாங்கிச் செல்கிறார்கள். விநாயகர் சதுர்த்தியன்று சாலையில் என்ன நடந்தது? மக்கள் ஊர்வலம் சென்றார்கள். வீட்டிலேயே வழிபடுங்கள், வெளியே வராதீர்கள் என சொன்னோம்.

கும்பல் கும்பலாக, கடைவீதிகளில் பொருட்கள் வாங்கினார்கள், கொண்டாட்டமாக இருந்தார்கள். இதனால் என்ன நடந்தது? கோவிட் பரவல் அதிகமாயிற்று. ஒவ்வொரு கோவிட் நோயாளிக்கும் அரசு ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழிக்கிறது.

ஒவ்வொரு நோயாளிக்கும் மருத்துவமனையில் ஒரு படுக்கை வசதி தேவைப்படுகிறது. டாக்டர்கள், நர்சுகள் அவர்களை கவனிக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கு ஆக்சிஜன், வென்டிலேட்டர், மருந்துகள், ஊட்டச்சத்து மிக்க உணவு கொடுக்க வேண்டும்.

இத்தனையும் இலவசமாக வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். சமூக இடைவெளியை பின்பற்றாத மக்கள், இலவச சிகிச்சை வேண்டும் என விரும்புகிறார்கள். எங்கே இப்படி செய்வார்கள், ஏன் செய்ய வேண்டும்? ஏன் எல்லாவற்றையும் அரசே செய்ய வேண்டும்? நீங்கள் பணம் செலுத்தமாட்டீர்களா?

இதைக்கேட்டால் நான் வரி கட்டுகிறேன் என சொல்வார்கள். உண்மையில் நீங்கள் எவ்வளவு வரி கட்டுகிறீர்கள்? நாம் செலுத்துவது அனைத்தும் மறைமுக வரிதான். நூறுகோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில், சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானவர்களே வருமான வரி செலுத்துகிறார்கள். இதுதான் நமது கேரக்டர்.

இப்படியான கேரக்டர் கொண்ட ஒரு நாடுதான் தற்போது நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இது பொறுப்பற்ற தன்மை கொண்ட கேரக்டர் ஆகும். இப்பாடியாக, அந்த வீடியோவில் கிரண்பேடி பொங்கியிருக்கிறார். இன்னமும் தம்மை ஐபிஎஸ் அதிகாரியாகவே பாவித்துக்கொண்டு, அவர் பேசும் கருத்துகள் சர்ச்சையாகி வருகிறது. பட்ஜெட் விவகாரத்தில் அவர் கிளப்பிய சர்ச்சை அடங்குவதற்குள், மக்களை சகட்டுமேனிக்கு திட்டித் தீர்த்திருக்கிறார்.

மத்திய பா... அரசுதான் தம்மை துணை நிலை ஆளுநராக நியமித்தது என்பதை மறந்து, சர்வாதிகாரி போல கிரண்பேடி நடந்துகொள்வது, நேரடியாகவும், மறைமுகமாகவும், தேர்தலின்போது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். எனவே மத்திய அரசு கிரண்பேடி விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு நல்லதொரு தீர்வை உடனடியாக காண வேண்டும்.

கிரண்பேடியின் இந்த வீடியோ தொடர்பாக, புதுச்சேரியில் சாமானியர்களிடம் பேசியபோது, வருமான வரி கட்டுகிறவர்கள்தான் உசந்தவர்கள் என்றால், நாங்கள் அற்பமானவர்கள் என கவர்னர் கூறுகிறாரா? வரி ஏய்ப்பு செய்வது எங்களைப் போன்றவர்களா?, மேல்தட்டு மக்களா? எதற்கு எங்களிடம் அரசு ஜிஎஸ்டி வசூலிக்கிறது?  இலவசமாக சிகிச்சை தர வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமையல்லவா? என மக்கள் பொங்குகிறார்கள்.

—————————

Please Subscribe Vels Media YouTube Channel: https://www.youtube.com/channel/UC_zBBAjCO_LWYt63zVQgeYw?view_as=subscriber

—————————

RO தண்ணீர் ஏன் குடிக்கக் கூடாது? என்ன உடல் உபாதைகள் ஏற்படும்?