‘கூழாங்கல்’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை! டைகர் விருதையும் வென்ற முதல் தமிழ் படம்! 

0
40

சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில், அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு(Oscar 2022), கூழாங்கல் திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 13 படங்களை பின்னுக்குத் தள்ளி கூழாங்கல் திரைப்படம் இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

திரைத்துறையின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகவும், திரைக்கலைஞர்களுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய கவுரவமாகவும் ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் விருதுகளை வழங்கும் விழாவானது, அமெரிக்காவில் மிக பிரம்மாண்டமாக நடைபெறும். 2022-ம் ஆண்டு நடைபெற இருக்கும் 94-வது ஆஸ்கர் விருது மார்ச் 27-ம் தேதி லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் நடைபெறும் என்று ஆஸ்கர் அகாடமி தெரிவித்துள்ளது.

பிறமொழிப் படங்களுக்கான பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு படத்தை தேர்வு செய்ய  ஃபிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா சார்பில் இயக்குனர் ஷாஜி என்.காருண் தலைமையில் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இவர்கள் கொல்கத்தாவில் படங்களை பார்த்தனர். ‘சர்தார் உத்தாம்’, ‘ஷேர்னி’, ‘செல்லோ ஷோ’, ‘நாயாட்டு’  மற்றும் தமிழ் படங்களானகூழாங்கல்யோகி பாபுவின்மண்டேலா’  உள்ளிட்ட 14 திரைப்படங்கள் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றிருந்தன. விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில், யுவன்சங்கர் ராஜா இசையில், அறிமுக இயக்குனர் பி.எஸ். வினோத்ராஜ் இயக்கியகூழாங்கல்திரைப்படத்தை நடுவர்கள் தேர்வு செய்துள்ளனர். தற்போது கூழாங்கல் திரைப்படம் சிறந்த இந்திய திரைப்படமாக ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் நடைபெற்று வரும் பல்வேறு சர்வதேச விழாக்களில் பங்கேற்று கூழாங்கல் திரைப்படம் விருதுகளை வென்றுள்ளது. இந்த ஆண்டு ரோட்டர்டாமில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கூழாங்கல் திரைப்படம்டைகர்  விருதுபெற்றது. டைகர் விருதை வென்ற முதல் தமிழ் படம் கூழாங்கல் ஆகும். வறுமை, குழந்தை வளர்ப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய வாழ்வியலை கூழாங்கல் திரைப்படம் பேசுகிறது.

செல்லப்பாண்டி, கருத்தடையான்

மதுரை மேலூருக்கு அருகிலுள்ள கிராமத்தில், இருள் சூழ்ந்த நடு இரவில், ஒரு அம்மா மற்றும் அவரது 2 வயது மகன், குடிகார தந்தையால் துன்புறுத்தப்பட்டு, வீட்டை விட்டு துரத்தப்படுகிறனர். அந்த அம்மா தனது 2 வயது மகனை கையில் தூக்கிக் கொண்டு, சுமார் 13 கிலோ மீட்டர் நடந்து அவரது தாய் வீட்டிற்கு செல்கிறார். அந்த தாய் வேறு யாரும் அல்ல தனது அக்கா தான் என்கிறார்கூழாங்கல்திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் ராஜ். யதார்த்தமான கதையம்சம் கொண்ட இந்த படத்தில்செல்லப்பாண்டி மற்றும் கருத்தடையான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள இயக்குநர் வினோத்ராஜ், “எதிர்பாராத கவுரவம் இது. இன்னும் இரண்டு சுற்று பரிசீலனை எஞ்சியுள்ளது. உலகம் முழுக்க உள்ள ஜுரிக்களின் வாக்குகளை பெறும் பட்சத்தில் கூழாங்கல் திரைப்படம் ஆஸ்கர் விருதை வெல்லும். இதற்காக இன்னும் சில நாட்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்என்று கூறியுள்ளார். இந்தத் திரைப்படம் விரைவில் தியேட்டரில் ரிலீசாகும் எனத் தெரிகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry