டாஸ்மாக் ஊழலையும் அம்பலப்படுத்துவோம்! முடிந்தால் தொட்டுப்பாருங்கள்! திமுக-வுக்கு அண்ணாமலை பகிரங்க சவால்!

0
80

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுகவுக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார். மின்துறையைத் தொடர்ந்து, டாஸ்மாக்கில் நடக்கும் ஊழலையும் அம்பலப்படுத்த உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில், ஆளும் திமுகவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தற்காப்பு ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்கிறது. ஆனால் தமிழக பாஜகவோ, தாக்குதல் ஆட்டம் எனப்படும் offensive game-ஐ ஆடத் தொடங்கியிருக்கிறது. திமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து 5 மாதங்கள் ஆன நிலையிலேயே, அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் பொது வெளியில் விவாதத்துக்கு வந்துவிட்டது. முன்னணி சாட்டிலைட் மற்றும் அச்சு ஊடகங்கள் இவற்றை பேச மறுத்தாலும், சமூக ஊடகங்களில் ஊழல் புகார்கள் மறைக்கப்படவில்லை.

கோயில்களை அனைத்து நாட்களும் திறக்குமாறு அண்ணாமலை அறிவித்தபடி தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கோயில்களை திறக்க அண்ணாமலை கெடுவும் விதித்தார். இது அமைச்சர் சேகர்பாபுவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. பின்னர் அனைத்து நாட்களும் கோயில்கள் திறக்கப்பட்டன. போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி இனிப்பு வழங்குவதில் முறைகேடு நடைபெற இருப்பதாக அண்ணாமலை கூறியதை அடுத்து, ஆவின் நிறுவனத்திடம் தீபாவளி இனிப்பை வாங்குமாறு போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு, முதலமைச்சர் மு..ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. திருப்பூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல விடுதியிலுள்ள சமையல்காரர்களை, தனது வீட்டில் தங்கி காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை வேலை செய்ய அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பணி கொடுத்திருப்பதாக, அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுமட்டுமல்லாமல், மின்சாரத்துறையில் முறைகேடு நடைபெறுவதாகவும் அண்ணாமலை தொடர்ந்து கூறிவருகிறார். அதாவதுதூத்துக்குடி அனல் மின்நிலைய ஒப்பந்ததாரர்களிடம் 4% கமிஷன் பெற்றுக்கொண்டு பில்களை கிளியர் செய்திருக்கிறார்கள். மின்துறையில், மிகப்பெரிய ஊழல் நடைபெற இருக்கிறது, செயற்கையாக மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறார்கள், ஒரு யூனிட் மின்சாரம் ரூ.20க்கு வாங்குகிறார்கள்என அவர் குற்றம்சாட்டினார். இதற்கு எதிர்வினையாற்றுவதாக நினைத்து, அண்ணாமலை மீது அமைச்சர் செந்தில் பாலாஜி தனிநபர் தாக்குதல் நடத்துகிறார்.

அண்ணாமலையின் தாக்குதல் ஆட்டம்

அமைச்சர்கள் மீது அண்ணாமலை கூறும் அடுத்தடுத்த ஊழல் புகார்களால், ஆளும் திமுக தரப்பு எரிச்சலடைந்து உள்ளது. எனவே அவருக்கு மன ரீதியான நெருக்கடியைக் கொடுக்க ஆளும் திமுக தரப்பு முயற்சிப்பதாகத் தெரிகிறது. ஐபிஎஸ் அதிகாரியாக கோலோச்சிய அண்ணாமலை, தற்போது தாக்குதல் ஆட்டத்தை, அதாவது Offencive Gameஐ தொடங்கிவிட்டார்

File Image

பங்களாதேஷில் இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து போராட்டம் நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “செந்தில் பாலாஜி மேலும் 3 மாதங்களுக்கு அமைச்சராக நீடித்தால், டாஸ்மாக்கில் நடைபெறும் ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வருவோம். ஒரு குடும்பத்தின் வளத்தினை பாதுகாப்பதற்காக, நேர்மையான நியாயமான ஊழியர்களை ஆளும் தரப்பு ஊழல்வாதிகளாக மாற்றுகிறது. இனி தமிழ்நாடு தாங்காது, தமிழ்நாடு அரசு ஊழலை நிறுத்த வேண்டும். பில் கிளியர் செய்ய 4%, ஒப்பந்தம் கொடுக்க 15% கமிஷன் வாங்குவதை நிறுத்தை வேண்டும். ஊழல் செய்தவர்கள் எங்கே இருந்தாலும் தூக்கிக் கொண்டு வருவோம் என பிரதமர் கூறியுள்ளார். இது தமிழக அரசுக்கும், தமிழக அமைச்சர்களுக்கும் பொருந்தும்.

பிஜேபியை எப்படிக் கையாளுவது என எங்களுக்குத் தெரியும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். தொட்டுப் பார்க்கட்டும், 17 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம். மோடி டெல்லியில் இருக்கிறார். தொடுவார்கள் என்று காத்திருக்கிறோம். துறைமுகம் என்ற ஒரு தொகுதியில் இருந்து அவர் அரசியல் செய்கிறார். செந்தில் பாலாஜி, சேகர்பாபு போன்றோர் தொகுதியின் ராஜா என்று சுற்றி வருகிறார்கள். ஒரு தொகுதியில் அரசியல் செய்பவர்கள் இங்கு வந்து மிரட்டக்கூடாது. அவர்களுக்கு மோடியை யார் என்று தெரியவில்லை, பிஜேபியை பற்றி தெரியவில்லை. ஊழல் செய்தால் தட்டிக்கேட்போம். பிஜேபி மீது திமுக கை வைத்தால் வட்டியும் முதலுமாக திருப்பித்தரப்படும்என்று அவர் கூறியுள்ளார்.

ஆளும் கட்சி சார்பு ஊடகங்கள்

அமைச்சர்களின் ஊழல் புகார்கள் குறித்து கேள்வி எழுப்புவோரை ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை. அந்த வரிசையில்தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்களை முன்னணி பெரு ஊடகங்கள் புறக்கணிக்கின்றன. அண்ணாமலையின் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு செய்தியாளர்களை அனுப்பும் ஊடகங்களில் பெரும்பாலானவை, அவற்றை ஒளிபரப்புவதோ, அச்சில் ஏற்றுவதோ இல்லை. அண்ணாமலை மீதான தனிநபர் தாக்குதலை, ‘அமைச்சர் அதிரடிஎன்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு சில முன்னணி ஊடகங்கள் தங்கள் நன்றிக் கடனையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றன.

பட்டியலிட்ட ஜுனியர் விகடன்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்வைக்கு ஊழல் குற்றச்சாட்டுகள் ஒருபுறமிருக்க, அமைச்சர்களின் ஊழலை வெளிக்காட்டும் விதமாக, முன்னணி வாரமிருறை இதழான ஜுனியர் விகடன், அட்டைப்படத்துடன், 4 பக்கங்களுக்கு செய்தி வெளியிட்டுள்ளது. அதில், இத்தனை நாள்கள் அமைதி காத்த எதிர்க்கட்சிகள், ஆளும்கட்சி அமைச்சர்களுக்கு எதிராக சீற ஆரம்பித்துள்ளன என கூறியுள்ளது. செந்தில்பாலாஜி மீதான கமிஷன் புகார், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறைகளில் அமைச்சர் எ.. வேலு கமிஷன் கேட்பதாக வெளியாகும் புகார், அதே துறையில், அதிமுக ஆட்சியில் கோலோச்சிய நிறுவனங்களுக்கே மீண்டும் ஒப்பந்தம், துரைமுருகன் வசமுள்ள நீர்வளத்துறையில் நடைபெறுவதாக கூறப்படும் முறைகேடுகள், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஊரக வளர்ச்சி, போக்குவரத்து, பால்வளம் இப்படி பல துறைகளிலும் எதிரொலிக்கும் கமிஷன் புகார்கள் என அந்த செய்தியில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry