காவிப்பூ சூடிய குஷ்பு! நாட்டை சரியான பாதையில் வழிநடத்துவதாக மோடிக்கு புகழாராம்! அன்றே கணித்த வேல்ஸ் மீடியா!

0
13

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு, பாஜகவில் இணைந்தார். தேர்தலில் பாஜக வெற்றி பெற பாடுபடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்தவர் குஷ்பு. இவர் அண்மைக்காலமாக பாஜகவுக்கு ஆதரவாக சில கருத்துகளை தெரிவித்து வந்தார். இதனால் காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு குஷ்பு மறுப்பு தெரிவித்து வந்தார். அதேநேரம், குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதை ஆகஸ்ட் 2-ந் தேதியே வெளியிட்ட வேல்ஸ் மீடியா, பா...வுக்கு குஷ்பு ஏன் வேண்டும் என்பதையும் விளக்கமாக எழுதியிருந்தது.

Also Read குஷ்பு கொண்டையில் காவிப்பூ! பா...வுக்கு ஏன் வேண்டும் குஷ்பு?

இந்நிலையில், காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு இன்று காலை குஷ்பு கடிதம் எழுதினார். இதையடுத்து, காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்புவை நீக்குவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இந்த நிலையில், பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் குஷ்பு அக்கட்சியில் இணைந்தார். டெல்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் உள்ளிட்டோர் எல்.முருகன் உடனிருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. நாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் மோடி. பாஜகவில் சிறப்பாக செயல்படுவேன். தேர்தலில் பாஜக வெற்றி பெற பாடுபடுவேன் எனத் தெரிவித்தார். இவரைப்போன்றே, ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன், ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி சரவணகுமார் ஆகியோரும் பாஜகவில் இணைந்தனர்.