கேள்விக்குள்ளாகும் டிவிட்டர் நிறுவனத்தின் நடுநிலை! தான் வலதுசாரி என எலான் மஸ்க் அறிவிப்பு!

0
231

இடதுசாரி சித்தாந்தத்தில் இருந்த தான், எவ்வாறு வலதுசாரி ஆனேன் என்று விளக்க, அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கதில் ஓவியம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

டிவிட்டர் நிறுவனத்தை 44 மில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து எலான் மஸ்க் வாங்கியுள்ளார். இதனை அடுத்து அவர் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் டிவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

2008-ஆம் ஆண்டிலிருந்து 2022-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இடதுசாரியாக இருந்து எவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக வலதுசாரி ஆக மாறினேன் என விளக்கும் ஓர் கிராபிக் படத்தை எலான் மஸ்க் பதிவிட்டு இருந்தார். அதே சமயத்தில் தான் தீவிர வலதுசாரி கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டிவிட்டரை வாங்கிய எலான் மஸ்க், தன்னை வலதுசாரி என அறிவித்துள்ள நிலையில், சமூக செயற்பாட்டாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். டிவிட்டர் உலகம் முழுவதும் சமூக இயக்கங்களை உருவாக்க உதவியது, ஆனால் அது தொடர்ந்து சாத்தியமாகுமா? என அவர்கள் வினவுகின்றனர்.

ஆனால், தான் வலதுசாரியாக இருந்தாலும், டிவிட்டர் நிறுவனம் எந்த சார்பும் இன்றி இயங்கும் என்று மஸ்க் தெரிவித்துள்ளார். அப்போதுதான் பொதுநம்பிக்கையை பெற முடியும் என்று கூறும் அவர், வலது, இடது என இரு தரப்பினரும் ஆன்லைனில் தங்களை வெளிப்படுத்துவதை சாத்தியமாக்குவதே தனது குறிக்கோள் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே, எலான் மஸ்க் டிவிட்டரில் பகிர்ந்த படத்தை உருவாக்கிய காலின் ரைட் என்கிற ஓவியக் கலைஞர், எலான் மஸ்க் தனது ஓவியத்தை பகிர்ந்த காரணத்தால் அதனை இணையத்தில் நல்ல விலைக்கு விற்று பணமாக்க முயற்சி மேற்கொண்டுவருகிறார். இதற்காக என்.எஃப்.டி. (non-fungible token) காப்புரிமம் பெற்றுள்ள அவர், ‘எலான் மஸ்க் பகிர்ந்த ஓவியத்தை வாங்க இன்றே முந்துங்கள்..!’ என்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஆஃபர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry