தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனனின் மகள் உயிரோடு இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மண்டபம் அகதிகள் முகாமில் இருந்த அவர், தனது கணவருடன் இலங்கை தப்பிச் சென்றுள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துவாரகா தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன், மண்டபம் முகாமில் இருந்து, ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, தங்கள் சொந்த ஊருக்கு சட்டவிரோத படகில் ரகசியமாக சென்றதாக தெரிகிறது. ஒரு காலத்தில் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் இருந்ததாக நம்பப்படும் இந்தத் தம்பதியர், மண்டபம் முகாமில் இருந்து இலங்கைக்கு தப்பிச் சென்றதை தமிழக அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
பிரபாகரன் மகள் துவாரகா, உதயகலா என்ற பெயரில் மண்டபம் முகாமில் தங்கியிருந்ததாகத் தெரிகிறது. முகாமில் இருந்து தப்பியது துவாரகாதான் என்பது, இலங்கையில் சமூக வலைதளங்களில் தற்போது வைராலகி வரும் வீடியோவைப் பார்த்த பிறகே, தமிழக காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரியவந்துள்ளது. ‘சர்வ மக்கள் கட்சி’ எனும் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளதாகவும் இலங்கை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் வைரலாகியுள்ள இந்த வீடியோ அங்குள்ள முக்கிய அரசியல் தலைவர் ஒருவர் மூலம் வேல்ஸ் மீடியாவுக்கு கிடைத்தது.
இதுகுறித்து வேல்ஸ் மீடியாவிடம் கருத்துத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான சிவாஜிலிங்கம், “தற்போதுள்ள சூழலில் துவாரகா உயிருடன் இருக்கிறாரா என்பதை உறுதி செய்ய முடியவில்லை. அப்படியே இருந்தாலும், இலங்கையில் அரசியல் கட்சித் தொடங்கி சுற்றுப்பயணம் மேற்கொள்வது இயலாத காரியம். ஏனென்றால், ராணுவக் கண்காணிப்பு தீவிரமாக உள்ள நிலையில், தலைவர் பிரபாகரன் மகன் துவாரகா எனத் தெரிந்தால், உடனடியாக கைது செய்வார்கள். அதேநேரம், இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பதும் தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.
2016 ஆம் ஆண்டு திருச்சி சிறப்பு முகாமில் தங்கியிருந்த தயாபர ராஜ், ராமநாதபுரம் மண்டபத்தில் உள்ள சிறப்பு முகாமில் தனது குடும்பத்தினரை சட்டவிரோதமாக அடைத்து வைத்திருப்பதாகக் கூறி காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தார். அவரது கோரிக்கையின் அடிப்படையில், இன்டர்போலால் தேடப்பட்டு வரும் ராஜை மண்டபம் முகாமுக்கு மாற்றுமாறும், வருவாய்த் துறையின் கண்காணிப்பில் தம்பதியர் மண்டபத்தில் இருக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அரசுக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Input DT Next
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry