வரி ஏய்ப்பு செய்ய முயற்சித்த ரீல் ஹீரோ ஜோசப் விஜய்! அம்பலப்படுத்திய நடிகை கஸ்தூரி! ரோல்ஸ் ராய்ஸ் கார் இத்தனை கோடியா?

0
12

நடிகர் ஜோசப் விஜய்க்கு 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரத்தில் நடிகர் விஜய் ஒரு படத்துக்கு ரூ.100 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில், கடந்த 2012ல் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், மனுவை தள்ளுபடி செய்ததோடு, விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார். மேலும் ‛‛சமூக நீதிக்காக பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் நடிகர்கள் வரி விலக்கு கோருவதை ஏற்க முடியாது. சினிமா நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். நிஜ வாழ்வில் ரீல் ஹீரோக்களாக இருக்கக்கூடாது. வரி செலுத்துவது என்பது நன்கொடை கொடுப்பது போன்றது அல்ல, குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்புஎன கண்டித்தார்.

மேலும், ”தனது திரைப்பட டிக்கெட்டுக்கு பணம் செலுத்திய அவரது லட்சக்கணக்கான ரசிகர்களின் உணர்வுகளை விஜய் மதிக்க வேண்டும். அந்த பணத்தில்தான் மனுதாரர் தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக உலகின் மதிப்புமிக்க காரை வாங்கியுள்ளார். இந்த தீர்ப்பு, பணக்காரர்களும், புகழ்பெற்றவர்களும் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்ற எண்ணம் அவர்களது ரசிகர்களிடையே தோன்றும் என்று நம்புகிறேன். அபராத தொகையை இன்னும் இரண்டு வாரத்திற்குள் முதல்வரின் கொரோனா நிதிக்கு வழங்கிட வேண்டும்’’ என நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் கூறினார்.

இந்நிலையில், விஜய் வழக்கில் ஐகோர்ட் கூறிய தீர்ப்பினை மேற்கோள்காட்டி நடிகை கஸ்தூரி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், இன்று தலைப்பு செய்தியில் வந்த நடிகர் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் இதுதான். இந்த கார் 2013 ஆம் ஆண்டில் 8 கோடிக்கு மேல் வாங்கப்பட்டது. சுமார் 1.6 கோடி நுழைவு வரியை இந்த கார் ஈர்த்தது. இந்த தொகை விஜய்க்கு சவாலாக இருந்ததால், கோர்ட்டில் வரிவிதிப்புக்கு தடைகோரி வழக்கு தொடர்ந்தார். விஜய் வரி ஏய்ப்பு செய்ய முயற்சித்ததற்காக சென்னை உயர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதுஎன கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.

இதனிடையே ஜோசப் விஜய்க்கு சென்னை ஐகோர்ட் அபராதம் மற்றும் கண்டனம் தெரிவித்த விஷயம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. #actorvijay, #வரிகட்டுங்க_விஜய் என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆகின. நெகட்டிவ் கமெண்ட்கள் வைரலாக, அவரது ரசிகர்கள் வழக்கம் போல் விஜய் செய்தது தப்பில்லை என்கிற ரீதியில் #WeSupportThalapathyVijay என்ற ஹேஷ்டாக்கை டிரெண்ட் செய்தனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry