நான்தான் பொதுச்செயலாளர்! விரைவில் சுற்றுப்பயணம்! சசிகலா அறிவிப்பால் நிம்மதி இழக்கும் அதிமுக கேம்ப்!

0
24

கட்சியை அழிக்க விடமாட்டேன், தொண்டர்கள் துணையுடன் கட்சியை மீட்பேன் என சசிகலா கூறியுள்ளார். அடுத்த கட்ட திட்டத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த புவனேந்திரன், விருதுநகரைச் சேர்ந்த குரு ராமச்சந்திரன், திருப்பூரைச் சேர்ந்த சமரசன், ராமநாபுரத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி, ஈரோட்டைச் சேர்ந்த கோபால், சிவகங்கை சண்முகநாதன் மற்றும் பண்ருட்டியைச் சேர்ந்த உத்திரவேல் ஆகியோருடன் சசிகலா தொலைபேசியில் பேசியுள்ளார்.

அப்போது, “கட்சியின் மூத்த உறுப்பினர்கள், தொண்டர்கள் கவலைப்பட நான் இனியும் விடமாட்டேன். விரைவில் நான் வந்துவிடுவேன். கட்சியை அழிக்க யாரையும் விடமாட்டேன். தொண்டர்கள் துயையுடன் கட்சியை மீட்பேன். ஊரடங்கு முடிந்ததும் அம்மா நினைவிடம் செல்வேன். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து தொண்டர்களை சந்திக்க சுற்றுப் பயணம் செல்கிறேன். தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. முதலில் கட்சியை சரி செய்ய வேண்டும். கட்சியை நல்லபடியாக வழிநடத்தி அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சிவகங்கை சண்முகநாதனுடன் அவர் பேசும்போது, “தொண்டர்கள் என்னை பொதுச் செயலாளர்னு சொல்லிட்டீங்க. நான் நிச்சயம் வந்து தலைமை ஏற்பேன். கவலைப்படாதீங்க. நான் தலைமையேற்க வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். எனவே உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவேன் என சசிகலா தெரிவித்துள்ளார்.

சசிகலாவிடம் பேசுபவர்களை, கட்சியில் இருந்து அதிமுக தலைமை நீக்கி வருகிறது. ஆனால், விளாத்திகுளம் உள்ளிட்ட சில இடங்களில், அதிமுக கூட்டத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கில் தற்போது படிப்படியாக தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் சசிகலா விரைவில் தொண்டர்களை சந்திப்பார் என தெரிகிறது. ஒருவாரத்திற்கு இத்தனை மாவட்டங்கள் என திட்டம் வகுத்து அவர் தொண்டர்களை சந்திக்க உள்ளதாக தெரிகிறது. சசிகலாவின் அடுத்தடுத்த அறிவிப்புகளால் அதிமுக தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry