டிரைவிங் லைசென்ஸ் எக்ஸ்பயரி ஆயிடுச்சா! புரோக்கர தேடாதீங்க! ஆன் லைன் மூலம் ஈஸியா புதுப்பிக்கலாம்!

0
173

ஓட்டுநர் உரிமம் காலாவதியாகிவிட்டால், டிரைவிங் ஸ்கூலையோ,அல்லது புரோக்கரையோ தேட வேண்டும். ஆன் லைன் மூலமாகவே எளிதாக புதுப்பித்துக்கொள்ளலாம்.

புதிதாக எடுக்கப்படும் டிரைவிங் லைசென்ஸ், நமது வயதைப் பொறுத்து சில ஆண்டுகளுக்கு  செல்லுபடியாகும். காலாவதியான பின்னர் லைசன்ஸை புதுப்பிக்க வேண்டும். முன்பெல்லாம் லைசென்ஸ் எடுக்கவும், காலாவதியானால் புதுப்பிக்கவும் புரோக்கர் அல்லது டிரைவிங் ஸ்கூல்தான் நமக்குத் தெரிந்த வழி. அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்துடன், பல சேவைக்கட்டணங்களை கொடுக்க வேண்டும். இப்போது, எங்கும் அலையாமல்,  ஆன்லைன் மூலமாகவே லைசென்சை புதுப்பிக்கலாம்.

ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்கவோ அல்லது அதில் ஏதேனும் திருத்தங்கள் செய்யவோ ரூ.400 வரையில் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க, ஆதார் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கையொப்பம், பழைய ஓட்டுநர் உரிமம் போன்றவை தேவைப்படும்.

போக்குவரத்துத் துறையின் https://parivahan.gov.in/parivahan/ என்ற இணைய முகவரிக்குள் சென்று, About Us பக்கத்தில் உள்ள Online Services என்ற வசதியைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Driving License Related Services என்பதை கிளிக் செய்யவும். அங்கு மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து (https://sarathi.parivahan.gov.in/sarathiservice/stateSelectBean.do) DL Services என்ற வசதியில் சென்று continue கொடுக்கவும். இப்போது டிரைவிங் லைசன்ஸ் நம்பர், பிறந்த தேதி, மாநிலம், RTO, PIN code போன்ற விவரங்களைப் பதிவிடவும்.

பின்னர் மொபைல் நம்பர், முகவரி போன்ற விவரங்களை பதிவிட்டு proceed கொடுக்க வேண்டும். டிரைவிங் லைசன்ஸ் விவரங்களில் ஏதேனும் திருத்தம் செய்யவேண்டியிருந்தாலும் அதைச் செய்யலாம். பின்னர் Renew DL என்ற வசதியில் சென்றால் ஒரு படிவம் வரும். அதைச் சமர்ப்பித்து proceed கொடுக்க வேண்டும்.

பின்னர் இதற்கான கட்டணத்தை நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றின் மூலமாக செலுத்தலாம். பின்னர் RTO அலுவலகத்தை தொடர்பு கொண்டு அப்பாயிண்ட்மெண்ட் முன்பதிவு செய்து, அந்த நேரத்தில் பழைய டிரைவிங் லைசன்ஸுடன் செல்ல வேண்டும். அங்கு சரிபார்ப்பு செய்யப்பட்டு புதிய டிரைவிங் லைசன்ஸ் வழங்கப்படும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry