‘நீட்’ விலக்கு பெற சாத்தியமே இல்லை! கண்துடைப்புக்காக குழு அமைத்து அறிக்கை பெற்றது அம்பலம்! வேல்ஸ் பார்வை!

0
60

தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்த ஏ.கே. ராஜன் குழு அறிக்கையால், எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்றே கூறப்படுகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போதுதான் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது என்பதை மறக்கடிக்கப்பதற்கான கருவிதான் இந்தக் குழு.

2010-ம் ஆண்டு திமுக அங்கம் வகித்த மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, திமுகவைச் சேர்ந்த செ.காந்திசெல்வன் சுகாதாரத்துறை இணையமைச்சராக இருந்தார். அப்போது, எம்.பி.பி.எஸ் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, நுழைவு மற்றும் தகுதித் தேர்வு நடத்துவது (Eligibility cum Entrance Test) நடத்துவது என்று கெஸட் அறிவிக்கை வெளியானது. இதில் இரண்டு விஷயங்களை முக்கியமாகப் பார்க்க வேண்டும். மன்மோகன்சிங் அரசு நீட் தேர்வை கட்டாயமாக்கியதற்கான ஆதாரம் மற்றும் நீட் தேர்வுக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் வாதாடிப் பெற்ற வெற்றி

 

 

 

 

 

 

 

 

 

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்தான் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது என்பது மக்களவை இணையதளத்திலேயே இருக்கிறது. மக்களவையில், மராட்டியத்தைச் சேர்ந்த பாட்டில் பதம்சின்ஹ பாஜிராவ் என்ற உறுப்பினர், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், இளநிலை முதுநிலை மருத்துவப் படிப்புக்கு NEET தேர்வு கட்டாயமா? என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு 07-12-2012 அன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆஸாத், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புக்கு NEET தேர்வு கட்டாயம்(Mandatory) என பதிலளித்துள்ளார்

Source : http://loksabhaph.nic.in/Questions/QResult15.aspx?qref=131326&lsno=15

இரண்டாவதாக, தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டபோது, தமிழக அரசுக்கு எதிராக ஆஜரானவர் ப. சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம். உச்ச நீதிமன்றத்தில் வாதாடி, விலக்கு கொடுக்கவிடாமல் தடுத்த நளினி சிதம்பரம், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டுமானால், தமிழகம் இனி கடவுளிடம்தான் மேல்முறையீடு செய்ய முடியும்என்று கிண்டலாகக் கூறினார். நீட் தேர்வை கடுமையாக எதிர்த்த ஜெயலலிதா, தமிழகத்துக்கு மூன்று ஆண்டுகள் விலக்கு பெற்றதுடன், நிரந்தர விலக்கு பெறுவதற்கான சட்டப்போராட்டங்களை முன்னெடுத்து வந்தார்.

நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என ஒருபுறம் கூறிவந்த காங்கிரஸ், தனது அரசு மூலம் மறுபுறம் தேர்வை கட்டாயமாக்கியது.  அத்துடன், ப. சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மூலம் விலக்குப்பெற முடியாதபடி முட்டுக்கட்டை போட்டது. இப்படி இரட்டை நிலைப்பாடு எடுத்து, தமிழக மாணவர்களை வஞ்சித்துவிட்டு, ‘நீட்தேர்வைத் திணித்தது பா...வும், .தி.மு..வும்தான் என தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கே.எஸ். அழகிரி, பீட்டர் அல்ஃபோன்ஸ் போன்றோர் கூறி வருகின்றனர்.

தேர்தல் பிரச்சாரத்தின்போதும், தேர்தல் அறிக்கையிலும், தமிழகத்தில் நீட் தேர்வு நடக்காது என திமுக உறுதியாகக் கூறியது. தேர்விலிருந்து விலக்கு பெற முடியாவிட்டால் மாணவர்களை காப்பியடிக்க விடுவோம் என கே.என். நேரு சொல்லியிருந்தார். தனியொரு மாநிலத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், நீட் விலக்கு சாத்தியமில்லை என்பது திமுகவுக்கு நன்றாகவே தெரியும்.  இதுதெரிந்தும், கண்துடைப்பாகவே, நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான 9 பேர் குழு, நீட் பாதிப்பு குறித்து ஆராயும் என முதலமைச்சர் மு.. ஸ்டாலின் அறிவித்தார். இந்தக் குழுவை எதிர்த்து கரு நாகராஜன் தொடர்ந்த வழக்கில், முதலில் கண்டனம் தெரிவித்த ஐகோர்ட், பின்னர் இந்தக் குழு செல்லும் என தீர்ப்பளித்தது.

இதையடுத்து, .கே. ராஜன் குழு அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கிறது. இந்தக் குழுவில் உள்ள அனைவருமே நீட் தேர்வுக்கு எதிரானவர்கள். இதுதான் திமுகவின் மடைமாற்றும் உத்தியாகவே பார்க்கப்படுகிறது. அதாவது, இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்குமாறு சட்டமன்றத்தில் அனைத்து கட்சி ஆதரவுடன் திமுக அரசு தீர்மானம் நிறைவேற்றும். அது ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

தீர்மானமானது குடியரசுத் தலைவரின் பார்வைக்குச் செல்லவே சில மாதங்கள் ஆகும். அதை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ மேலும் சில மாதங்கள் ஆகும். இதன் பின்னர் மீண்டும் சட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாகும். எங்களுக்கு நீட் வேண்டாம், நாங்கள் வேறு தேர்வை நடத்திக் கொள்கிறோம் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதாடும். வாதப் பிரதிவாதங்கள் முடிந்து, முடிவு தெரிய குறைந்தது 4 ஆண்டுகள் ஆகும். அதுவரை தமிழகத்தில் நீட் தேர்வு நடக்கும். அதற்குள் திமுக ஆட்சியும் நிறைவுபெற்றுவிடும். இதுதான் அவர்களது ஆகச்சிறந்த உத்தியாக உள்ளது

இதையெல்லாம் மறைக்கவே, அதிமுக அரசுதான் நீட் தேர்வை கொண்டுவந்தது என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், தனியொரு மாநிலத்துக்கு விலக்கு தர முடியாது என தெளிவாகக் கூறிவிட்டபிறகு, நீட் தேர்வை நடத்தாமல் இருக்க முடியாது என்பது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு நன்றாகவே தெரியும்.  எடப்பாடி பழனிசாமி 7.5% உள்ஒதுக்கீடு கொண்டு வந்தது, அரசுப் பள்ளி மாணவர்கள் 400-க்கும் அதிகமானோரின் மருத்துவப் படிப்பை சாத்தியமாக்கியும் கூட, அதே பிரச்சாரத்தை திமுகவும், காங்கிரசும் இன்னமும் செய்து வருவது அவர்களது கையறு நிலையைக் காட்டுகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry