வேல்ஸ் மீடியா கணித்தபடி மண்ணாடிப்பட்டில் போட்டியிடுகிறார் நமச்சிவாயம்! வில்லியனூரில் ஆதரவாளர்கள் முன் கண்ணீர்!

0
15

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம்,  வில்லியனூர் தொகுதியிலிருந்து மாறி, மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிடுவதை உறுதி செய்துள்ளார்.

புதுச்சேரியில் வில்லியனூர் தொகுதியில் வென்று அமைச்சராக இருந்தவர் நமச்சிவாயம். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த அவர், மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிட முடிவு செய்தார். இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் வில்லியனூர் தொகுதியில் போட்டியிடுவதைவிட, வன்னியர்கள் அதிகம் வசிக்கும் மண்ணாடிப்பட்டு தொகுதியே பாதுகாப்பானது எனக் கருதி நமச்சிவாயம் சத்தமில்லாமல் தேர்தல் பணிகளைத் தொடங்கினார். இதையறிந்து, கடந்த 8-ந் தேதி வேல்ஸ் மீடியா செய்தி வெளியிட்டிருந்தது.

Also Readதொகுதி மாறுகிறார் நமச்சிவாயம்! சென்டிமென்ட் காரணமாக மண்ணாடிப்பட்டில் போட்டியிட முடிவு!

இந்நிலையில்பாஜக சார்பில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் நமச்சிவாயம் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அதை அவரே தனது ஆதரவாளர்களிடம் இன்று(மார்ச் 15) தெரிவித்தார். அப்போது, வில்லியனூரிலிருந்து மண்ணாடிப்பட்டு தொகுதியில் இம்முறை போட்டியிடுவதை பற்றி சொன்னபோது,  நமச்சிவாயம் கண்ணீர் விட்டு அழுதார். அவரை அவரது ஆதரவாளர்கள் தேற்றினர். பாஜக போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் விவரங்களும் டெல்லியிலிருந்து இன்றோ, நாளையோ வெளியாகும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry