ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு வாய்ப்பில்லை! சேது சமுத்திர திட்டத்தை யாராலும் தொட முடியாது! சுப்ரமணியன் சுவாமி!

0
62
Tamil Nadu VHP Founder

பாஜக மிக ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கும் ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு வாய்ப்பில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை அடுத்துள்ள, சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் மணிமண்டபத்தில், தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத், கிராமக் கோவில் பூசாரிகள் பேரவை உள்ளிட்ட அமைப்புகளின் நிறுவனர் எஸ். வேதாந்தத்தின் 90-வது பிறந்தநாள் விழா – ஸ்ரீகாள சாந்தி வைபவம் நடைபெற்றது. காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விழாவுக்கு முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில் மடாதிபதிகள், ஆதீனகர்த்தர்கள், ஆன்மிகப் பெரியோர்கள் கலந்துகொண்டனர். பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன்சாமி, ஹெச். ராஜா, தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ‘தினமலர்’ ஆர்.ஆர். கோபால்ஜி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய சுப்ரமணியன் சுவாமி, திமுகவையும், கருணாநிதியையும் விமர்சித்தார். கருணா, நிதி ஆகியவை சமஸ்கிருத சொற்கள்தான் என்றார். உதயசூரியன் என்ற சொல்லும் சமஸ்கிருதத்தில் தான் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியன் சுவாமி, சேது சமுத்திரத் திட்டத்தை யாராலும் தொட முடியாது, அது முடிவுக்கு வந்துவிட்டது. ராம் சேது பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து உள்ளேன். அந்த மனு வருகிற 22-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது என்று கூறினார். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அதற்கு வாய்ப்பில்லை என பதிலளித்தார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry