உடல் பருமன் அறிகுறிகள்; ஏற்படுத்தும் நோய்கள்! Obesity: What You Need to Know

0
69
Getty Image

அதிக எடையின் (Over Weight) அடுத்த நிலைதான் உடல் பருமன் (Obesity). இதற்குக் காரணம், உணவுப் பழக்க வழக்கம், உடற் பயிற்சி இல்லாதது. ஒபிசிட்டிதான் அனைத்து நோய்களுக்கும் மூலம். அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன், ஒபிசிட்டியை நோய் என்று வகைப்படுத்துகிறது. தசைக்கு கீழேயும், உடல் உறுப்புகளுக்கு மேலேயும் கொழுப்பு படிவதே அதிக எடைக்கும், உடல் பருமனுக்கும் காரணம்.

Also Read : சர்க்கரை வெஜ்ஜா, நான் வெஜ்ஜா! சர்க்கரையில் கலப்படும் ரசாயனங்கள் என்னென்ன? How bad is white sugar for you?

நீங்கள் அதிக எடை கொண்டவரா, உடல் பருமன் உடையவரா என்பதை Body Mass Index (BMI) மூலம் கணக்கிடலாம். (உயரம், எடையை வைத்து இதை கணக்கிட நிறைய ஆப் உள்ளது) BMI 30-க்கு அதிகமாக இருந்தால் நீங்கள் உடல் பருமனானவர்கள். BMI 25 முதல் 29.9 வரை இருந்தால் அதிக எடை கொண்டவர்கள். இன்ச் டேப் மூலம் தொப்புளைச் சுற்றி அளவெடுங்கள், ஆண்களுக்கு 90 செ.மீ, பெண்களுக்கு 80 செ.மீ. இருந்தால் ஒபிசிட்டி. உடல் பருமனை அதன் தீவிரத்தன்மையின் அடிப்படையில் மூன்றாக வகைப்படுத்துகின்றனர். BMI 25.0 முதல் 29.9 கிலோ/மீ² வரை இருந்தால், நீங்கள் அதிக எடை பிரிவில் சேர்க்கப்படுவீர்கள்.

BMI – 18.5 or under underweight
BMI – 18.5 to <25 “normal” weight
BMI – 25 to <30 overweight
BMI – 30 to <35 class 1 obesity
BMI – 35 to <40 class 2 obesity
BMI – 40 or over class 3 obesity (also known as morbid, extreme, or severe obesity)

இதில் மூன்றாவது வகையை “morbid” ஒபிசிட்டி என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இது அதிக ஆபத்து நிறைந்ததாகும். அதிக கொழுப்பு மற்றும் கலோரி உள்ள உணவை எடுத்துக்கொள்ளுதல், உடல் உழைப்பு இல்லாத வாழ்வியல் முறை, தூக்கமின்மையால் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால் பசி ஏற்பட்டு அதிக கலோரி உணவை உண்ணுதல், மரபு வழி பருமன், வளர்சிதை மாற்ற விகிதம் குறைதல், பேறுகால உடல் பருமன் ஆகியவையே ஒபிசிட்டிக்கான காரணங்கள்.

ஒபிசிட்டிக்கு சில மருத்துவ ரீதியான காரணங்களும் உண்டு. பெண்களுக்கான இனப்பெருக்க ஹார்மோன் சமநிலை மாறுதல், பிறப்பிலிருந்தே எப்போதும் பசியுடனே இருப்பது, உடலில் ஹார்மோன் கோர்டிசால் அதிகரிப்பு, தைராய்டு சுரப்பியானது முக்கிய ஹார்மோன்களை உற்பத்தி செய்யாமலிருப்பது, கீல்வாதம் அதாவது Osteoarthritis. (இதனால் உடல் உழைப்பு குறைந்து உடல் பருமன் அதிகமாகும்).

Also Read : சுவையான நஞ்சா அஜினோமோட்டோ? அதென்ன ‘சைனீல் ரெஸ்டாரன்ட் சின்ட்ரோம்’? THE HARMFUL EFFECTS OF AJINOMOTO!

அத்துடன் மரபு, சூழல், உளவியல் காரணிகள் போன்றவையும் உடல் பருமனுக்கான வாய்ப்பை அதிகப்படுத்துகின்றன. மரபு ரீதியாகவே சிலருக்கு உடல் பருமன் இருக்கும், இவர்கள் உடல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதல்ல. உணவுப் பழக்க வழக்கம், உடலுழைப்பு போன்றவற்றை தீர்மானிப்பதில், வீடு, பள்ளி, அலுவலகம், நாம் வசிக்கும் சூழல் போன்றவை முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பலருக்கும், உடல் எடை அதிகரிக்க மன அழுத்தம் காரணமாகிறது. மன அழுத்தத்தை குறைக்க சாப்பிடும் மாத்திரைகளும் உடல் எடையைக் கூட்டிவிடும். மது, அதனுடன் எடுத்துக்கொள்ளும் கலோரி நிறைந்த சைட் டிஷ்கள், புகை பிடிப்பது ஆகியவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது. இதுவும் உடல் எடை அதிகரிக்க காரணமாகிவிடுவதுண்டு. ஸ்டீராய்டுகள், கர்ப்பமாவதைத் தடுக்க எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளும் ஒபிசிட்டியை ஏற்படுத்தும்.

இடுப்பைச் சுற்றி சதை தொங்கத் தொடங்கினாலே ஒபிசிட்டியுடன் தொடர்புடைய நோய்கள் வரத் தயாராகின்றன என அர்த்தம். தசைகளில் சேரும் அதிகக் கொழுப்பானது, எலும்புகள் மற்றும் உடல் உறுப்புகளுக்கு, இயற்கைக்கு மாறாக அதிக வேலை கொடுத்து பலவீனமடையச் செய்கிறது.

டைப் 2 டயாபடீஸ், இதய நோய், அதிக ரத்த அழுத்தம், மார்பகம் – பெருங்குடல் – கருப்பை புற்றுநோய், பக்கவாதம், பித்தப்பை பாதிப்பு, ஃபேட்டி லிவர் அதாவது கல்லீரல் பெருத்துவிடுவது, கொலஸ்ட்ராஸ் அதிகரிப்பு, தூக்கத்தில் மூச்சுத் திணறுவது, சுவாசப் பிரச்னை, கீல்வாதம், மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, செரிமானக் கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

Also Read : கேடு விளைவிக்கும் ரீஃபைண்டு ஆயில்? சுத்திகரிக்க சேர்க்கப்படும் ரசாயனங்கள் என்னென்ன? Adverse Effects of Refined Oil!

இதில் ஃபேட்டி லிவர் என்பது கல்லீரலில் கொழுப்பு படிவதால் ஏற்படுவது. இதை கண்டுகொள்ளாமல் விட்டால் பாதிப்பு அதிகமாகும். வரும் காலங்களில் பெரும்பாலானோரின் கல்லீரல் செயலிழப்புக்கு ஒபிசிட்டி முக்கிய காரணமாக இருக்கப்போகிறது என மருத்துவ உலகம் எச்சரிக்கிறது.

சராசரியாக இந்தியாவில் 5-ல் ஒருவர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒபிசிட்டியில் இருந்து வெளிவர வாழ்வியல் முறையில் மாற்றம், உடற்பயிற்சி, சமச்சீரான உணவு போன்றவை மூலம் எடையைக் குறைப்பதே அறிவியல்பூர்வமாக ஏற்கப்பட்ட வழி. மருத்துவமுறை என்று எடுத்துக்கொண்டால், இயற்கை மற்றும் மரபு வழி மருத்துவங்களில் சிகிச்சை உண்டு. இதற்கெல்லாம் முடியாதவர்களுக்கு அலோபதி மருத்துவ முறையில், உடற்பயிற்சி, உணவு முறை மாற்றங்களுடன், மருத்துவர்கள் சில மாத்திரைகளை கொடுப்பார்கள். இந்த மாத்திரைகள் நரம்பு மண்டலம் மற்றும் இருதய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கப்படுகிறது.

அன்றாட வாழ்வியல் முறைகளில் சில மாற்றங்கள், தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி (நடை, ஓட்டம், நீச்சல், சைக்ளிங் இவற்றில் ஒன்று), பழங்கள், காய்கறிகள், தானியங்கள், புரதம் குறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது ஆகியவற்றின் மூலம் உடல்பருமன் மற்றும் ஒபிசிட்டியில் இருந்து தப்பலாம். அதிக கொழுப்புள்ள உணவுகள், அதிக கலோரி நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry