நம்மில் பலருக்கு அவரவர் நட்சத்திரம், ராசி நிச்சயம் தெரிந்திருக்கும். சிலர், தங்களுக்கு நடைபெறும் தசா, புத்தி வரை தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் கரணநாதன் குறித்து பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை (ஜோதிட ஆர்வலர்கள், ஓரளவுக்கு ஜோதிடம் தெரிந்தவர்களை தவிர).
கருணாநிதி முன்னிலையில் ஜெ. தாக்கப்பட்டார்! ஸ்டாலின் பொய் சொல்வதாக ஈபிஎஸ் கண்டனம்!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுகவினரால் தாக்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் கூறினார். அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்றும், அந்த சம்பவம் ஜெயலலிதாவால் நடத்தப்பட்ட நாடகம் எனவும் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
சமூக நீதிக்கெதிரான செயல்களை மடைமாற்றுகிறார் திருமா! தனி நலனுக்காக சமூகத்தை பலிகொடுப்பதா? என அண்ணாமலை கேள்வி!
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாங்குநேரியில் பள்ளி மாணவர்களிடையே சாதியப் பிரச்சினைகள் காரணமாக, 12-ம் வகுப்பு பட்டியல் சமூக மாணவர் மற்றும் அவரது சகோதரி இருவரும் சக பள்ளி மாணவர்களால் வெட்டப்பட்டுள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.
கெஜ்ரிவால் போல நிபந்தனை விதிக்காதது ஏன்? காவிரிப் பிரச்சனையைச் சுட்டிக்காட்டி மு.க. ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் சரமாரிக் கேள்வி!
அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு குறித்து, அதிமுக சேலம் புறநகர் மாவட்டம் சார்பில், சேலத்தை அடுத்த ஓமலூரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கூட்டத்தில் பங்கேற்று, அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
செறிவூட்டப்பட்ட அரிசிப் பையில் எச்சரிக்கை வாசகம்! தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி!
சென்னை உயர் நீதிமன்றத்தில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் வெற்றிச் செல்வன் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் துவங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு திட்டத்தின் கீழ் இந்த செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கப்படுகிறது.
ஆனால், மத்திய அரசின் விதிகளின்படி, தலசீமா, அமீனியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படியே இந்த அரிசியை உண்ண வேண்டும். எனவே, இதுகுறித்த எச்சரிக்கை வாசகம் அந்த அரசி வழங்கப்படும் பைகளில் இடம்பெறச் செய்ய வேண்டும். ஆனால், அதுபோனற் எந்த எச்சரிக்கை வாசகமும் இல்லாமல் இந்த அரிசி வினியோகிக்கப்படுகிறது.
Also Read : வெளிநாட்டு நிறுவனம் பயன்பெற குழந்தைகளுக்கு நஞ்சை கொடுப்பதா? செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த எச்சரிக்கை!
எனவே, சட்டவிதியின்படி உரிய எச்சரிக்கை வாசங்களுடன் மட்டுமே செறிவூட்டப்பட்ட அரசி பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்பட வேண்டும். இதைப் பின்பற்றாமல் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், இந்த அரிசி அடைக்கப்பட்டுள்ள சாக்குப் பையில் எச்சரிக்கை வாசகம் இடம் பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. சாக்குப் பையில் உள்ள எச்சரிக்கை வாசகம் நுகர்வோருக்கு எப்படித் தெரியும்? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த மனுவுக்கு செப்டம்பர் 21-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.
Subscribe to our channels on YouTube & Telegram &
Tamilnadu &
Pondicherry
