அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்களின் முதுகெலும்பு வேளாண்மை என்றால், அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் உயிர் மூச்சு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களாகும்.
அரசு மருத்துவமனைகளில், மருந்துகள் மற்றும் பணியாளர்கள் கடுமையான பற்றாக்குறை! அம்பலப்படுத்திய சிஏஜி அறிக்கை!
இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில சுகாதாரத் துறையில் பிளாக் விரிவாக்க பயிற்றுநர், குடும்ப நல உதவியாளர், சுகாதார பெண் பார்வையாளர், குழந்தை நல அதிகாரி போன்ற பணியிடங்களில் 75% மேல் பற்றாக்குறை இருக்கிறது. இரண்டாம்நிலை சிகிச்சை மையங்களில் மருத்துவ மற்றும் உதவி மருத்துவ பணியாளர்கள் தேவைக்கு ஈடாக இல்லை.
1 – 5ம் வகுப்புகளுக்கு இறுதித் தேர்வு நடக்கும்! அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
தமிழ்நாட்டில் 1 முதல் 5 -ம் வகுப்புகளுக்கு இறுதித் தேர்வு கிடையாது எனத் தகவல் வெளியான நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை இறுதித்தேர்வு நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அதிகரிக்கும் மின்வெட்டு! அமைச்சரின் ‘அடடா’ விளக்கத்தால் அதிர்ந்துபோயுள்ள தலைநகர்வாசிகள்! தூக்கமின்றி தவிப்பதாக வேதனை!
தலைநகர் சென்னையில் 8 ஆண்டுகளில் இல்லாத அளவில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தகிக்கும் வெயிலால் மக்கள் திணறி வரும் நிலையில், தலைநகரின் பெரும்பாலான இடங்களில் மின்வெட்டு பிரச்னை தலைதூக்கியிருப்பதாக சமூகவலைதளங்களில் சென்னைவாசிகள் புலம்புகின்றனர்.
பெரும் சிக்கலில் சபாநாயகர் அப்பாவு! அதிமுக நிர்வாகி தாக்கல் செய்த மான நஷ்ட வழக்கில் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!
சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாபு முருகவேல் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணையை, எம்பி-எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குதிரையேற்ற போட்டியில் அசத்தும் இளம் வீராங்கனைகள்! மீண்டும் தங்கம் வென்று அசத்தல்!
FEI World Equestrian Dressage Challenge 2022 குதிரையேற்றப் போட்டியில் சென்னையின் இளம் வீராங்கனைகள் புதிய உச்சத்தை தொட்டதுடன், மீண்டும் தங்கம் வென்று அசத்தி இருக்கிறார்கள். பெங்களூருவில் உள்ள ஏஎஸ்சி மையத்தில் கடந்த வாரம் இந்தப் போட்டி நடைபெற்றது.
