Monday, July 7, 2025
Home Blog Page 165

மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்த நால்வர் பலி! மதுராந்தகத்தில் போலி மது குடித்த மூவர் உயிரிழப்பு! கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு திமுக நிர்வாகிகள் ஆதரவு?

சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த மீனவ கிராமமான எக்கியார்குப்பத்தில் அமரன் என்பவர் கள்ளச்சாராயம் விற்றதாகவும், அதை சங்கர், சுரேஷ், தரணிவேல், மண்ணாங்கட்டி, ராமமூர்த்தி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் வாங்கி அருந்தியதாகவும் கூறப்படுகிறது. இவர்களில் சுரேஷ் என்பவர் வாந்தி மயக்கத்தோடு சுருண்டு விழ, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புதுச்சேரியை அடுத்த காலப்பட்டில் உள்ள பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பள்ளிக்கல்வி ஆணையர் மாற்றத்துக்கு வரவேற்பு! ஆணையர் பணியிடத்தை ரத்து செய்யுமாறு ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!

ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள், தலைமைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்கள். அதில், “தமிழக ஆசிரியர் கூட்டணி உட்பட ஜாக்டோ- ஜியோ ஆசிரியர் இயக்கங்களின் தொடர் கோரிக்கையினை ஏற்று, பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் இ.ஆ.ப.-வை, மனிதவள மேலாண்மைத் துறை செயலாளராக மாற்றம் செய்திருப்பதை தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் பெரிதும் வரவேற்று நன்றி பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மாணவர்களுக்கான சைக்கிள் கொள்முதலில் மெகா ஊழல்! முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை! Bicycle Scam!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக 10,32,592 சைக்கிள்களை வாங்க தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பில் டெண்டர் விடப்பட்டது. மாணவர்களுக்கான சைக்கிள் விலை – ரூ. 5,279/- மற்றும் மாணவிகளுக்காக வாங்கப்படும் சைக்கிள் விலை – ரூ. 5092/-

4 ஆண்டுகளில் டீசல் வாகனங்களுக்குத் தடை! மத்திய அரசுக்கு எரிசக்தி மாற்றத்திற்கான குழு பரிந்துரை!

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் பெருமளவு இயங்குகின்றன. அதே நேரத்தில், மின்சார வாகனங்களின் சகாப்தம் தொடங்கியுள்ளது. மின்சார வாகனங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், டீசல் வாகனங்களை தடை செய்வது குறித்து விவாதம் நடந்து வருகிறது. 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில், டீசலில் இயங்கும் நான்கு சக்கர வாகனங்களை தடை செய்ய வேண்டும் என்ற பரிந்துரையை அரசு இன்னும் ஏற்கவில்லை என்று பெட்ரோலிய அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

புதிதாக 25 மணல் குவாரிகள் திறப்பு! பொக்லைன் மூலம் மணல் அள்ள அனுமதி! தமிழக அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கண்டனம்!

தமிழ்நாட்டில் புதிதாக  ஆற்று மணல் குவாரிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அண்மையில் பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் புதிதாக 25 இடங்களில் ஆற்று மணல் குவாரிகள் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

டிஆர்பி ராஜா அமைச்சராக்கப்பட்டதால் டெல்டா திமுகவில் சலசலப்பு! பூண்டி கலைவாணன் அப்செட்! ஆதரவாளர்கள் கடும் கொந்தளிப்பு!

கடந்த சில வாரங்களாகவே, தி.மு.க அமைச்சரவை மாற்றம் குறித்த செய்திகள் தி.மு.க-வினரை பரபரக்க செய்திருந்தன. இந்தச் சூழலில் மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா, திருவையாறு தொகுதி எம்.எல்.ஏ துரை. சந்திரசேகரன், திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி.கலைவாணன், அரசு கொறடா கோ.வி.செழியன் உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க எம்.எல்.ஏக்களிடையே அமைச்சர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவியது.

உதயசந்திரன் அச்சுறுத்துகிறார்; முதல்வர் கண்டுகொள்ளவில்லை! மாநிலக் கல்விக்கொள்கை குழுவிலிருந்து விலகுகிறேன்- ஜவஹர் நேசன்

இந்த உயர்நிலைக் குழு உருவாக்கும் மாநிலக் கல்விக்கொள்கை, பெயரில் மட்டும் மாற்றம் கொண்ட, தனியார்மய, வணிகமய, கார்ப்பரேட், சந்தை, சனாதன சக்திகளின் நலன்களை கொண்டிருக்கின்ற தேசியக்கொள்கை 2020-ன் மற்றொரு வடிவமாகவே இருக்கும் என முன்னாள் துணைவேந்தர் ஜவஹர் நேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

antalya bayan escort