முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், கோவை மாவட்டத்தில் உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
மழையினால் டெல்டா மாவட்டங்களில் பருத்தி, எள் சேதம்! உரிய நிவாரணம் வழங்க ஈபிஎஸ் வலியுறுத்தல்!
கோடை மழையினால் டெல்டா மாவட்டங்களில் சேதம் அடைந்த பருத்தி, எள் பயிர்களுக்கான நிவாரணத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
சிறையிலிருந்து விடுதலையான 660 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா! காலை உணவு, கழிவறைகள் வசதிகள் கிடையாது!
சிறையில் தண்டனை முடிந்து வெளியான 660 பேருக்கு, சென்னையில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஏ.சி. அறையில் நடைபெறுவதால், சுத்தமான ஆடைகள் அணிந்து அதாவது துர்நாற்றம் வீசாத ஆடைகள் அணிந்து வரவேண்டும் என்று பயனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சியை பிரித்து புதிய ஆள்தேர்வு வாரியம் அமைக்க திட்டம்! அரசுப் பணியாளர் தேர்வு முறை வலுவிழந்துவிடும் என பாமக கண்டனம்!
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தமிழகத்தில் அரசுத்துறை பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை (டி.என்.பி.எஸ்.சி) இரண்டாக பிரிக்கவும், சார்புநிலைப் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக புதிய தேர்வு வாரியத்தை அமைக்கவும் அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அரசு பணியாளர் தேர்வு முறையை வலுவிழக்கச் செய்யும் இந்த கருத்துரு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.