தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, பிரபல ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு(04/MAY/2023) பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார். அப்போது, இந்த ஆண்டு ஜனவரியில் ஆளுநர் உரைக்குப் பிறகு, தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பாக நீங்கள் வெளிநடப்பு செய்தது சரியா? முக்கிய தலைவர்களின் பெயர்களையும் விட்டுவிட்டீர்களே? என்று முதல் கேள்வியாக எழுப்பப்பட்டது.
‘தகுதியோ, யோக்கியதையோ இல்லை’! கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டை வறுத்தெடுத்த தி.மு.க.! சைலன்ட் மோடுக்குப் போன சிபிஎம் தலைவர்கள்!
’தி.மு.க. அரசு தொடர்ந்து இருக்க வேண்டுமானால்…’ என்று சொல்லும் தகுதியோ யோக்கிதையோ மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன் போன்றோருக்கு இல்லை’ என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது.
தமிழகத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகுமா? அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை!
விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுதிப்தோ சென் இயக்கத்தில் இந்தியில் தயாராகி உள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில், அதா சர்மா, பிரணவ் மிஷ்ரா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் இந்த திரைப்படம் வரும் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. படத்தில் இடம்பெற்ற 10 சர்ச்சை காட்சிகளை நீக்கி மத்திய தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
நிலக்கரிக்காக அடுத்தடுத்து ஏலம் விடப்படும் கிராமங்கள்! மாநில நிர்வாகத்துக்கு தெரியாதா? பாஜகவுடன் கைகோர்த்து தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறதா?
தமிழ்நாட்டில் சுமார் 3 கோடியே 2 லட்சத்து 75,000 டன் பழுப்பு நிலக்கரி படிமங்கள் உள்ளன. இதனடிப்படையில், சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி மற்றும் வடசேரிக்கு கிழக்கே நிலக்கரி படிமங்கள் இருப்பதை ஆய்வு மூலம் உறுதி செய்துள்ள மத்திய அரசு, அந்த மூன்று நிலக்கரி சுரங்கங்களையும் ஏலம் விட தீவிரமாக முயற்சிக்கிறது. நிலக்கரி சுரங்க ஏலத்தின் ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது சுற்றுகளில் இந்த மூன்று ஊர்களும் இருந்தன.
கள்ளச்சாராய விற்பனை அமோகம்! 2 பாக்கெட் வாங்கினால் முட்டை இலவசம்! தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறதா? என டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி!
தமிழகத்தில் தடையின்றி கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவது அதிர்ச்சியளிப்பதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், மற்றொரு பதிவில், மாநகரப் பேருந்துகளை இயக்குவதற்கு போதிய எண்ணிக்கையில் ஓட்டுநர்கள் இல்லை என்று கூறி, நடத்துநர்களுக்கு பணி மறுக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுவதாக கூறியுள்ளார்.
திமுக 2 ஆண்டுகள் ஆட்சி! தொடர்பில்லாமல் இருக்கும் கல்வி அமைச்சரின் அறிவிப்புகள்! தடுமாறும் கல்வித்துறை!
3 Min(s) Read : கல்வித் துறையில் திமுக அரசு முன்னெடுத்த குறிப்பிடத்தக்க பணிகள் என இரண்டைக் குறிப்பிடலாம். முதலாவது, கல்விக் கொள்கை உருவாக்கக் குழு ஒன்றை அமைத்தது; மற்றொன்று ஆதிதிராவிடர், பழங்குடியினர், சீர்மரபினர் உள்ளிட்டோருக்கான நலப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையின்கீழ் கொண்டுவருவதாக பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தது.
மின் கட்டணம் ரூ.1000க்கு மேலிருந்தால் ஆன்லைனில் செலுத்த வேண்டும்! நுகர்வோர் இழப்பீடு பெறவும் புதிய நடைமுறை அறிமுகமாகிறது!
தமிழ்நாட்டில் குறைவழுத்த மின் நுகர்வோர் கட்டணம் ரூ. 1,000க்கு மேல் இருந்தால் ஆன்லைனிலோ அல்லது டிமாண்ட் டிராஃப்ட் மூலமாகவோ செலுத்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம்(TNERC) பரிந்துரை செய்துள்ளது.