Monday, February 16, 2026
Home Blog Page 335

பேரறிவாளன் விடுதலை! ஜெ. சிந்தனைக்கு கிடைத்த வெற்றி! ஓபிஎஸ், ஈபிஸ் பெருமிதம்!

30 ஆண்டு காலமாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் இன்று விடுதலை செய்திருப்பது அதிமுகவிற்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும், நிம்மதியையும் தருகிறது என்று அதிமுக தெரிவித்துள்ளது.

மோசமான தொற்று பரவலை ஏற்படுத்தும் ஒமைக்ரான்! எந்த ஒரு வைரஸையும் விட ஒமைக்ரான் வேகமாக பரவுவதாக பில்கேட்ஸ் எச்சரிக்கை!

0

ஒமைக்ரான் தொற்றால் ஒரு மோசமான மிக மோசமான தொற்று பரவலுக்குள் சர்வதேச நாடுகள் நுழையும் சூழல் ஏற்பட்டுள்ளது என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார்.

குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியுமா? உச்ச நீதிமன்றத்திற்கு திரௌபதி முர்மு கேள்வி?

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது தொடர்பாக, ஆளுநருக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடுத்த வழக்கில், JB Pardiwala, R Mahadevan ஆகிய 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 142-ல் வழங்கப்பட்டிருக்கும் உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி கடந்த மாதம் 8ம் தேதி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது.

நடப்பு நிதியாண்டில் ஒரு கோடி மரக்கன்றுகள் நட திட்டம்! ஈஷாவின் ‘காவேரி கூக்குரல் இயக்கம்’ மும்முரம்!

தமிழ்நாட்டில் நடப்பு நிதியாண்டில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் வாயிலாக 1 கோடி மரக்கன்றுகளை விவசாயிகள் மூலம் நட ஈஷா திட்டமிடப்பட்டுள்ளது. 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள ஈஷா நர்சரிகளில் தரமான டிம்பர் மரக்கன்றுகள் வெறும் 3 ரூபாய்க்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

1 – 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு உண்டா? இல்லையா? குழப்பத்தை தீர்த்தது தமிழக அரசு!

கரோனா தொற்று பரவல் குறைந்துவந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதனிடையே, கரோனா பரவல் காரணமாக டிசம்பர் பாதியில் இருந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.

பின்னர் தொற்று பரவல் குறைந்து வந்த நிலையில், ஜனவரியில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இதனிடையே, இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இறுதித் தேர்வு நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

கோப்புப் படம்

அண்மையில், புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை அனுப்பிய குறிப்பாணையில், 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மணவர்களுக்கும் தேர்ச்சி தரப்பட வேண்டும். வரும் மே 15-ம் தேதிக்குள் தேர்ச்சி பட்டியலை ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும். பள்ளிக்கு குறைவான வருகை பதிவேடு, பள்ளிக் கட்டணம் செலுத்தவில்லை போன்ற காரணங்களைக் காட்டி மாணவர்களை வெளியேற்றக் கூடாது. 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை வரும் 30-ம் தேதி முதல் தொடங்கும்” என்று அறிவித்துள்ளது.

இதேபோல், தமிழகத்திலும் ஆல் பாஸ் அறிவிப்பு வெளியாகுமா? என்ற கேள்வி பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு தமிழக பள்ளி கல்வித்துறை இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்றும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது.

மேலும், 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என செய்தி வெளியான நிலையில், பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. 1-9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு திட்டமிட்டபடி மே 6-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

கல்வித்துறையில் குறிப்பிட்ட சித்தாந்தம் புகுத்தப்படுவதை ஏற்க முடியாது! சோனியா காந்தியின் கருத்துக்கு ஐபெட்டோ ஆதரவு!

ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை, காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தியின் கல்விச் சீர்திருத்தம் தொடர்பான கட்டுரையை மேற்கோள்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் மார்க்ஸ் சிலை! சமூக வளர்ச்சி, சமத்துவக் கொள்கை வளர அடிகோலும் என ஐபெட்டோ வரவேற்பு!

ஐபெட்டோ(AIFETO) என்கிற அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெர்மானிய தத்துவஞானியும், புரட்சிகர சோசலிசவாதியுமான கார்ல் மார்க்ஸ் சிலையை சென்னை பெருநகரில் நிறுவப்போவதாக, ஏப்ரல் 3-ம் தேதி சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, ஐபெட்டோ சார்பில் மனமார்ந்த பாராட்டுக்களையும், வரவேற்பினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

antalya bayan escort