மத்திய பல்கலைக்கழங்களில் நடத்த திட்டமிட்டுள்ள நுழைவுத் தேர்வை கைவிடக்கோரி சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு! NIA விசாரணைக்கு வலியுறுத்தல்! சட்டம் ஒழுங்கு சீர்குலைவு எனப் புகார்!
சென்னையில் தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
உஷார்..! நிரந்தரமாக காது கேட்காமல் போகலாம்! புளூடூத் ஹெட்போன் பயன்படுத்துவது பாதுகாப்பானதா..?
மொபைல் போன்கள், லேப்டாப்கள், டிவி போன்ற பல தொழில்நுட்ப சாதனங்கள் நாளுக்கு நாள் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்று வருகிறது. இவைகள் ஒவ்வொருவரது வாழ்விலும் இன்றியமையாததாகி வருகிறது. இதிலிருந்து வெளிவருவது என்பது ஒவ்வொருவருக்கும் பெரும் சவாலாக அமையும். இவற்றில் ஒன்றாக ப்ளூ டூத் ஹெட்போன்கள் குறித்தும், இதன் பயன்பாடு எப்படி பல்வேறு விதமான உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது பற்றியும் தெரிந்து கொள்வோம்.
புதுச்சேரி ‘பாஜக’-வை கம்பெனி போல நடத்தும் சாமிநாதன்! ‘VCC’ நாகராஜன் பகிரங்க குற்றச்சாட்டு!
புதுச்சேரி மாநில தலைவரும், நியமன எம்.எல்.ஏ.வுமான சாமிநாதன் பாஜக–வை கம்பெனி போல நடத்துவதாக விசிசி நாகராஜன் குற்றம்சாட்டுகிறார். மாநிலத்தில் கட்சியின் வளர்ச்சி கேள்விக்குறியாகிவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
நெஞ்சுக்கு நீதி’ படத்திற்கு இலவச காட்சி! கூவிக்கூவி டிக்கெட் விநியோகம் செய்யும் எம்.எல்.ஏ!
‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை இளைஞர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் இலவசமாக பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரு ஷோவை முழுமையாக முன்பதிவு செய்துள்ளார் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர்.
