தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, புதிய சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியதுடன் கடமையை முடித்துக் கொண்டது. அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என மத்திய அரசு கூறிவிட்ட நிலையில் சட்டப்போராட்டம் நடத்துவோம் என்று வசனம் மட்டும் தான் தமிழக அரசு பேசுகிறது; நீட் தேர்விலிருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்கவில்லை.
கட்சி இப்போதைக்கு இல்லை! வாக்குகள் இருந்தால் பணம் ரெடி! பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு!
தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், 2024 தேர்தல் தொடர்பாக காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் அடிப்படையில் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணையப்போகிறார் என எதிர்க்கட்சிகள் கூறின. ஆனால், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, காங்கிரஸுக்கு என்னைவிட, கட்சித் தலைமையே முக்கியம்’ எனக் கூறி, காங்கிரஸின் பேச்சுவார்த்தையிலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகினார்.
ஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை: எதிர்பாராத திருப்பம்! கியர் மாறும் குடும்பக் கட்டுப்பாடு!
ஆண்களுக்கான கருத்தடை முறைகளில் நீண்டகாலமாகவே ஒரு பெரிய மாற்றம் தேவைப்பட்டு வந்தது. தற்போது, விஞ்ஞானிகள் இந்த திசையில் ஒரு முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தக்கூடிய, ஹார்மோன் அல்லாத ஒரு ஆண் கருத்தடை மாத்திரை நிஜமாகலாம் என்று நியூயார்க்கைச் சேர்ந்த வெயில் கார்னெல் மருத்துவ(Weill Cornell Medicine) ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். விந்தணுக்கள் நீந்துவதைத் தடுக்கும் ஒரு செல் பாதையை (cell pathway) அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
தமிழகத்தை அச்சுறுத்தும் நீரிழிவு நோய்! இந்தியாவில் 10 கோடி பேர்…! அதிரவைக்கும் ஆய்வு முடிவுகள்!
உலக அளவில் தொற்றா நோய்களின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. தொற்றா நோய்களில் ஒன்றான சர்க்கரை நோயால் இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை பலரும் பாதிக்கப்படுகின்றனர். உலக அளவில் 1980-ம் ஆண்டு 10.8 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த எண்ணிக்கை 2014-ம் ஆண்டில் 41.4 கோடியாக அதிகரித்தது. 2000 முதல் 2019 வரையில் நீரிழிவு நோய் காரணமாக மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை 3 சதவீதம் அதிகரித்துள்ளது.
Guru Peyarchi 2025: மேஷம் முதல் மிதுனம் வரை..! குருப்பெயர்ச்சி பலன்கள்! Part – 1.
இந்த ஆண்டில் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025 அன்று குருபெயர்ச்சி நடக்க இருக்கிறது. திருக்கணிதத்தின்படி 14.5.2025 அன்று குரு பெயர்ச்சி நிகழ்கிறது.
அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கம்! மேலும் மூவரையும் நீக்கி பொதுக்குழுவில் தீர்மானம்!
கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
