Saturday, February 14, 2026
Home Blog Page 366

முடிவ நீங்க எடுக்கறீங்களா, இல்லை நாங்களே எடுக்கட்டுமா? பேரறிவாளன் வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனு நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தல்! புரோக்கராக செயல்படும் மூதாட்டி! போலீஸிடம் சிக்கிய தம்பதி!

பிறந்த மூன்று நாட்களேயான குழந்தையை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையிலிருந்து கடத்திச் சென்ற தம்பதியினரை ஊழியர்கள் மடக்கிப் பிடித்தனர். கண்காணிப்பு குறைபாடே திருட்டுக்கு காரணம் என புகார் எழுந்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் மேல் பலந்தை கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் மனைவி சுஜாதாவுக்கு மூன்று நாட்களுக்கு முன், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. மகப்பேறு பிரிவுக்குச் சென்று அந்தக் குழந்தையை திருடிக்கு கொண்டு இருவர் தப்ப முயன்றுள்ளனர்.

Also Read : நோயாளி வைத்திருந்த பணம் கொள்ளை! தனியார் மருத்துவமனை மெத்தனம்! சிசிடிவி-யில் பதிவான காட்சிகள்!

குழந்தை காணவில்லை என்பதை உடனடியாக உணர்ந்த சுஜாதா கூச்சல் போட்டுள்ளார். குழந்தையைத் திருடிய தம்பதி, மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியேறி பேருந்து நிலையத்திற்கு செல்ல முற்படும்போதே, சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரித்ததில், குழந்தையைத் திருடி வந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக விஷ்ணுகாந்தி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில், குழந்தையை திருடிச்சென்ற தம்பதியை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

விசாரணையில் அவர்களது பெயர் ராமு – சத்யா என்பது தெரியவந்தது. மகப்பேறு வளாகத்தில் வயதான மூதாட்டி ஒருவர் இந்த ஆண் குழந்தையை தன்னிடம் கொடுத்ததாகவும், குழந்தையை வாங்கிக்கொண்டு உடனடியாக மருத்துவமனை வளாகத்தைவிட்டு சென்றுவிட வேண்டும் என அந்த மூதாட்டி கூறியதாகவும் போலீஸாரிடம் சத்யா தெரிவித்துள்ளார். அந்த மூதாட்டி யார்? குழந்தையை திருடி விற்கும் புரோக்கராக அவர் செயல்படுகிறாரா? ராமு – சத்யா தம்பதியின் பின்னணியில் உள்ளவர்கள் யார், யார்? என்பதை போலீஸார் விசாரிக்கின்றனர். மருத்துவமனை மகப்பேறு பிரிவில் உரிய கண்காணிப்பு இல்லாததே, குழந்தையை எளிதாக திருட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்ததாக அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

Virat Kohli 50th Hundred: தலைவணங்கிய கோலி, உணர்ச்சிப் பெருக்கில் சச்சின்; ரசிகர்களின் முழக்கத்தால் அதிர்ந்த வான்கடே மைதானம்!

சர்வதேச கிரிக்கெட்டில் வரலாற்றுச் சாதனை படைத்து ஒட்டுமொத்த தேசத்தின் நம்பிக்கையையும் காப்பாற்றியிருக்கிறார் விராட் கோலி. மிக முக்கியமான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் சதமடித்ததோடு, ஒருநாள் போட்டிகளில் அதிக சதமடித்த வீரர் எனும் சச்சினின் சாதனையையும் கோலி முறியடித்திருக்கிறார்.

NLCக்கு எதிராகப் போராடிய அன்புமணி ராமதாஸ் கைது! போலீஸார் – பாமக தொண்டர்கள் இடையேயான மோதலால் பதற்றம்!

என்எல்சியை முற்றுகையிட்டு பாமக போராட்டம் நடத்திய நிலையில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். பாமகவினர் மீது போலீஸார் தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அப்பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது.

மின் கட்டண உயர்வால் கடும் நெருக்கடி! தொழிலாளர்களுடன் பீகாருக்கு இடம்பெயரும் திருப்பூர் பின்னலாடைத் தொழில்?

பின்னலாடைத் தொழிலுக்கு பிஹார் மாநில அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளதால் திருப்பூரில் பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும், தொழிலாளர்களும் பிஹார் மாநிலத்துக்கு படையெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சாதாரண சட்னிதான், பயன்னு பாத்தா ரொம்ப அதிகம். நோயே கிட்ட வராதாம்…!

உடல் நோய் எதிர்ப்பு சக்தியைப்  பெருக்கிக்கொள்வது மட்டும்தான் கொரோனா நோய்த் தொற்றிலிருந்துதற்காத்துக்கொள்ளும் ஒரே வழி என்கிறார்கள் மருத்துவர்கள்.

அதிகாரி மேல் புகார் கொடுத்தா யார் விசாரிக்கிறாங்க தெரியுமா? சம்பந்தப்பட்ட அதிகாரி தான்! – மக்கள் நம்பிக்கையை குலைக்கும் ‘முதலமைச்சரின் முகவரி’(CM Cell)!

தமிழ்நாடு அரசு பொதுமக்களின் குறைகளை நேரடியாக பெற்றுக்கொண்டு தீர்க்கும் நோக்கில் “முதலமைச்சரின் முகவரி” (CM Cell) என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளது. ஆனால், அந்த போர்ட்டலின் செயல்பாடு குறித்து சமீபத்தில் பல்வேறு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுபற்றி DT Next நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

antalya bayan escort