தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்புகள் பாராட்டுக்குரிய வகையில் மேம்படுத்தப்பட்டுள்ள போதிலும், தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் களத்தில் இல்லை என்ற வாதம் அரசு மருத்துவர்களின் தரப்பிலேயே முன்வைக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனைகள் தள்ளாட்டத்தில் உள்ளன. இதனால், உரிய நேரத்தில் உரிய சிகிச்சை கிடைக்காமல் சாமானியர்கள் சாபம் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குறுதிகளை மறப்பது நியாயமா? போராட்ட களத்தில் உள்ள ஆசிரியர்கள் குமுறல்!
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக் – TETO-JAC), தாங்கள் வலியுறுத்துகிற 31 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தொடர் முற்றுகைப் போராட்டத்தை சென்னை DPI அலுவலகத்தில் நடத்தி வருகின்றனர். இதன், முதல் நாளான நேற்று 13 மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்களும், இன்று 14 மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்களும், நாளை மீதமுள்ள மாவட்ட ஆசிரியர்களும் போராட்டத்தில் கலந்துக் கொள்கின்றனர்.
உலகிலேயே மிக ஆரோக்கியமான காய்கறி எது தெரியுமா? ஆய்வாளர்கள் சொல்லும் அதிர்ச்சித் தகவல்!
வாட்டர் கிரஸ் (Watercress) அல்லது ‘வாட்டர்கெஸ்’ எனப்படும் ஒருவகை காய்கறியை “உலகின் ஆரோக்கியமான காய்கறி” என்று அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் (CDC) அறிவித்துள்ளது. இந்த வாட்டர் கிரஸ் (Watercress) நீர் நிலைகளில் எளிதாகவும், அதிகமாகவும் வளரக்கூடிய ஒரு கீரை இனமாகும். இதனை கொமன் கிரஸ் மற்றும் கார்டன் கிரஸ் என்றும் அழைப்பது வழக்கம். தமிழில் நீர்வளர் கீரை என்கிறார்கள்.
காலையை விட மாலையில் நடப்பதுதான் ரொம்ப நல்லதா..? ஆய்வுகள் என்ன சொல்கின்றன?
நடைப்பயிற்சி என்பது அன்றாட வழக்கத்தின் ஒரு முக்கியப் பகுதியாக இருக்க வேண்டிய ஒன்று. ஆனால் பெரும்பாலானோர் இதை உணருவதில்லை. நடைபயிற்சி இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைத்தல் மற்றும் எடை இழப்புக்கு உதவுதல் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. நடைப்பயிற்சி நேரடியாக நம்முடைய இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், ரத்த சர்க்கரை அளவை சீராக்குகிறது. எனினும், நாம் எந்த நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்கிறோம் என்பதும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
நீர் நிலைகளை ஆக்கிரமித்துள்ள பங்காரு அடிகளார்? 8-ந் தேதி அகற்ற தமிழக அரசு முடிவு!
ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்குச் சொந்தமான அறக்கட்டளை மூலம் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனை, வணிக பயன்பாட்டுக் கட்டிடங்கள் உள்ளிட்டவை செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர், கீழ்மருவத்தூர், சோத்துப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலான கட்டிடங்கள் அரசு நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் கடந்த 2018-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
பேப்பர் கப்பில் டீ, காபி அருந்துவதில் உள்ள ஆபத்துகள்! குடல் புற்றுநோய் வரை வரக்கூடும் என எச்சரிக்கை!
ஆரம்பகாலங்களில் பானங்களை வாங்கி குடிப்பதற்கு மக்களிடம் செம்பு, சில்வர், மண்குவளை உள்ளிட்டவை பயன்பாட்டில் இருந்தன. அதன் பின்னர், பிளாஸ்டிக் கப்புகள் பயன்பாட்டிற்கு வந்தன. காலப்போக்கில் இதனைப் பயன்படுத்துவது ஆபத்து என சொல்லப்பட்ட நிலையில், அந்தப்பழக்கம் மாறி தற்போது பேப்பர் கப் பயன்பாட்டில் இருக்கிறது.
தமிழ் நிலத்துக்கு காலம் தந்த பெருங்கொடை பென்னிகுயிக்! போடி- சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பென்னிகுயிக் பெயர் வைக்கக் கோரிக்கை! பாகம் – 2
எனது அப்பா சந்தானமும், அம்மா அய்யம்மாளும் எனக்காகவும், என் உடன் பிறந்தவர்களுக்காக மட்டுமே வாழ்ந்தனர். நாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களது கனவாக இருந்திருக்க வேண்டும்.
