வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் நிலைய போலீஸார் நேற்று இரவு வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பள்ளிகொண்டா அடுத்த கோவிந்தம்பாடியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு காரில் இருந்து லாரிக்கு பொருட்களை சிலர் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
விவசாயிகள் போராட்டத்தின் பகீர் பினன்ணி! டிவீட் போட வெளிநாட்டு பிரபலங்களுக்கு மில்லியன் கணக்கில் பணம்!
விவசாயிகள் போராட்டத்தில் இப்படி ஒரு திருப்பம் ஏற்படும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்தியாவில் புதிய வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் சர்வதேச அளவிலான கவனத்தை ஈர்த்து, பேசு பொருளானது.
அம்மாவின் ரசம் போலவே… மணமும், குணமும் சேரும் மரபு சார்ந்த ஸ்பெஷல் ரசப்பொடி ரகசியம்!
தென்னிந்திய சமையலில் “ரசம்” எப்போதுமே ஒரு தனிச்சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. வெறும் ஒரு துணை உணவு மட்டுமல்ல இது; பல ஆரோக்கிய நன்மைகளைத் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு ‘சூப்பர் சூப்’. மிளகு ரசம், தக்காளி ரசம், பூண்டு ரசம், கொள்ளு ரசம், எலுமிச்சை ரசம் எனப் பல்வேறு வகைகள் இருந்தாலும், ஒவ்வொரு ரசமும் அதன் தனித்துவமான சுவையுடனும், மருத்துவ குணங்களுடனும் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தருகிறது.
கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் ஆசிரியர்கள் கைது! வன்முறையாளர்களை கொத்துக் கொத்தாக தூக்கும் போலீஸ்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த விவகாரம், தொடர்பாக நேற்று நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. பள்ளி சூறையாடப்பட்டது.
சென்னையில் பள்ளி அருகே விற்கப்படும் புகையிலைப் பொருட்கள்! மளிகைக் கடைகளில் கிடைக்கும் மதுபானங்கள்! அரசு தூங்குகிறது – மாணவர்களின் எதிர்காலம் பாழாகிறது!
கல்வி நிறுவனங்களுக்கு 100 யார்ட்ஸ் (சுமார் 91 மீட்டர்) சுற்றளவுக்குள் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதற்கா தடை சட்டம் தமிழ்நாட்டில் அமலில் உள்ளது. ஆனால், சட்டத்தை மீறி, சென்னையின் ஒவ்வொரு பள்ளி அருகிலும் குறைந்தது இரண்டு கடைகளாவது சட்டவிரோதமாகப் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாகப் பல நாடுகளை உள்ளடக்கிய புதிய ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. கல்வி நிலையங்களுக்கு அருகே புகையிலைப் பொருட்கள் எளிதாகக் கிடைப்பது கவலை அளிக்கிறது.
பல் துலக்காம தண்ணி குடிக்கலாமா? மருத்துவர்கள் என்ன சொல்றாங்க?
காலையில் எழுந்தவுடன் சில முக்கிய காலை கடன்களை செய்தாக வேண்டும் என்பார்கள். அதில் பல் துலக்குவதும் மிக அவசியமானதாக கருதபடுகிறது. பல் துலக்குதல் என்பது மிக முக்கியமான அடிப்படை சுகாதாரப் பழக்கங்களில் ஒன்றாகும். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறை பல் துலக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவார்கள்.
புதுச்சேரியில், காங்கிரஸ் – திமுக கூட்டணி உடைகிறது! ராஜ்பவன் தொகுதியில் எஸ்.பி. சிவக்குமார் போட்டி!
புதுச்சேரியைப் பொறுத்தவரை தீர்க்கமான ஒரு முடிவை எடுக்க திமுக தயாராகிவிட்டது. தனித்துக் களம் காண வேண்டும் என்பதில் மாநில அமைப்பாளர்கள் சிவா, எஸ்.பி. சிவக்குமார் ஆகியோர் உறுதியாக உள்ளனர்.
