பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை! பிள்ளைகளை அனுப்ப மறுத்து போராட்டம் செய்த பெற்றோர்!

0
39

கரூர் அருகே ஆரம்ப பள்ளிக்கு போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்.

கரூர் மாவட்டம் கடவூர் அடுத்த கீரனூர் பஞ்சாயத்து உட்பட்ட புதுவாடி என்ற கிராமத்தில் 1959 ஆம் ஆண்டு முதல் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் கடந்த கல்வியாண்டில் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 3 ஆசிரியர்கள் இப்பள்ளியில் பணியாற்றி வந்தனர்.

Also Read : நோய்பரவலைத் தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு!

2 ஆசிரியர்கள் இடமாறுதலில் வேறு பள்ளிக்குச் சென்று விட்டனர். தற்போது ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் 150 மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வந்த நிலையில், போதிய ஆசிரியர்கள் இல்லாததால் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டு வேறு பள்ளிக்கு சென்று விட்டனர். தற்போது 90 மாணவர் மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனர்.

தலைமை ஆசிரியர் ஒருவர் மட்டுமே தற்போது பணியாற்றி வருகிறார். ஒரு ஆசிரியர் மட்டுமே பாடங்களை எடுக்க வேண்டிய சூழல் இருப்பதால் மாணவர்களுக்கு கல்வி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும், கல்வி துறை அதிகாரிகளுக்கும் கடந்த ஒரு வருடங்களாக பல்வேறு புகார்கள், மனுக்கள் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை இன்று பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து வந்த கடவூர் வட்டார கல்வி அலுவலர் செந்தமிழ்ச்செல்வி, பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பெற்றோர் போராட்டத்தை கைவிட்டனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry