சொத்து வரி, மின் கட்டணத்தைத் தொடர்ந்து குடிநீர் வரியும் உயர்வு! பொதுமக்கள் அதிருப்தி!

0
110

சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் சொத்து வரி உயர்த்தப்பட்டது. இதற்கு மாநகராட்சி மன்ற கூட்டத்தில் ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை நகரின் பழைய பகுதிகளுக்கு சொத்து வரி அதிகமாகவும், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு குறைவாகவும் சொத்துவரி உயர்த்தப்பட்டது. ஆண்டு மதிப்பு மற்றும் சொத்து அமைந்து உள்ள தெருவின் மதிப்பு அடிப்படையில் சொத்து வரி உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முதல் அரையாண்டுக்கான சொத்து வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Also Read : பாடியை வாங்கலைன்னா கேஸ்! கலெக்டர் மிரட்டுவதாக கதறும் சமூக ஆர்வலர் குடும்பம்! குவாரி உரிமையாளர்களுக்கு ஆட்சியர் ஆதரவா?

ஏப்ரல் செப்டம்பர் மாதத்திற்கான சொத்துவரி இந்த மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும். சென்னையில் சொத்துவரி செலுத்துபவர்கள் 12.5 லட்சம் பேர் உள்ளனர். சொத்துவரியை தொடர்ந்து மின்கட்டணமும் உயர்த்தப்பட்டது. அதிகரிக்கப்பட்ட கட்டண விகிதம் இந்த மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியும் 7 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது.
எப்போதெல்லாம் சொத்து வரி உயர்த்தப்படுகிறதோ அப்போதெல்லாம் குடிநீர் வரியும் உயரும் என்று குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சொத்துவரி உயர்த்தப்பட்ட அளவில் 7 சதவீதம் குடிநீர் வரி வசூலிக்கப்படும்.

Also Read : தமிழகத்தில் வேகமாகப் பரவும் காய்ச்சல்! எழும்பூர் மருத்துவமனையில் நிரம்பி வழியும் படுக்கைகள்!

உதாரணத்துக்கு ஒருவருக்கு சொத்துவரி ரூ.1000-ல் இருந்து ரூ.1500 ஆக உயர்ந்து இருக்குமானால், உயர்த்தப்பட்ட ரூ.500க்கு 7 சதவீதம் குடிநீர் வரி உயர்வு கணக்கிடப்படும். 2022-23 நடப்பு ஆண்டிற்கான முதல் அரையாண்டு குடிநீர் வரி தற்போது வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.120 கோடி வருவாய் கூடுதலாக கிடைக்கும். உயர்த்தப்பட்ட குடிநீர் வரி குறித்து தகவல் எஸ்.எம்.எஸ். மூலம் நுகர்வோருக்கு அனுப்பப்படுகிறது” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விலைவாசி உயர்வு காரணமாக பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் நிலையில், சொத்து வரி, மின் கட்டண உயர்வைத் தொடர்ந்து குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியும் அதிகரிக்கப்பட்டிருப்பது மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry