கிடுகிடுக்க வைக்கும் விலை உயர்வு! பெட்ரோல் லிட்டர் ரூ.105ஐத் தாண்டியது! டீசல் ரூ.101ஐக் கடந்து விற்பனை!

0
3

நாட்டின் பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல் லிட்டர் ரூ106க்கு அதிகமாகவும், டீசல் ரூ100க்கு அதிகமாகவும் விற்பனையாகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்கிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தினமும் மாற்றி அமைத்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை அதிகரிக்கப்படுகிறது. இதனால், நாட்டின் பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல் லிட்டர் ரூ.106க்கு அதிகமாகவும், டீசல் லிட்டர் ரூ.100க்கு அதிகமாகவும் விற்பனையாகிறது.

Also Read :- சென்னையில் டீசல் விலை ரூ.100ஐத் தாண்டியது! தமிழகம், புதுச்சேரியில் பெட்ரோல் ரூ.105ஐ நெருங்குகிறது!

இந்த நிலையில் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகளும், டீசல் 33 காசுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் பெட்ரோல் ரூ105.13க்கும், டீசல் ரூ.101.25க்கும் விற்பனையாகிறது. 4 மாதங்களில் மட்டும் 66 முறை டீசல் விலையும், 70 முறை பெட்ரோலும் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

பல்வேறு நகரங்களில் பெட்ரோல் விலை 110 ரூபாயை தாண்டி உள்ளது. அதன்படி, மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 114.51 காசுகளுக்கு விற்கப்படுகிறது. டீசல் லிட்டர் 105.53 காசுகளுக்கு விற்பனையாகிறதுபெங்களூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் 109.97 ரூபாய்க்கும், டீசல் 101.36 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 108.39 ரூபாய்க்கும், டீசல் 97.95 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.  ஐதராபாத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 106.30 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 102.89 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

பெட்ரோல், டீசலின் தொடர் விலையேற்றத்தால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காய்கறி, மளிகை பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக சவூதி அரேபியா, வளைகுடா நாடுகள் மற்றும் ரஷியாவுடன் பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப சிங் பூரி கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry