புறா இவ்ளோ டேஞ்சரா? புறா எச்சத்தால் வரும் 60க்கும் மேற்பட்ட நோய்கள்! Pigeon droppings causes 60 diseases!

0
298
pigeon droppings and feathers are associated with respiratory diseases. 

பொதுவாக நமது நாட்டில் பால்கனிகள், மொட்டை மாடிகள், கோயில்கள், மசூதிகள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் பறவைகளுக்கு உணவளிக்கிறார்கள். இந்தியாவில் 21% நுரையீரல் பாதிப்பு பறவைகளின் இறகுகள் மற்றும் எச்சங்களின் வெளிப்பாட்டால் ஏற்படுகிறது. புறா பட்டுமல்ல வௌவால்களின் எச்சத்திலும் ஹிஸ்டோப்பிளாஸ்மா கேப்சுலாட்டம் (Histoplasma capsulatum) என்ற பூஞ்சைகள் இருக்கலாம். இவற்றின் ஸ்கோர்கள் காற்றில் மிதக்கும் தன்மை கொண்டவை.

புறாக்கள் அதிகம் கூடும் உயரமான குடியிருப்புகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் கவலைப்பட காரணம் உள்ளது. மாடப்புறாக்கள் உயர்ந்த கட்டிடங்களில் இருக்கும். அடுக்ககங்களில் குளிர்சாதனப் பெட்டியின் (ஏசி அவுட்டோர் யூனிட்) வெளிப்புற கட்டமைப்பில், சிறு, சிறு இடங்களில் புறாக்கள் வசிக்கின்றன.

Also Read : நடைப்பயிற்சி மட்டும் சர்க்கரைநோயை கட்டுப்படுத்துமா? இப்படித்தான் நடக்க வேண்டுமா? How Much Walking Is Best for Diabetes Control?

கால்நடை நுண்ணுயிரியல் நிபுணர்களின் கூற்றுப்படி, ‘புறாக்களின் எச்சங்களில் உள்ள பல கிருமிகள் 60 வகையான நோய்களை ஏற்படுத்தும். பறவைகளின் எச்சங்களை, ஒட்டுண்ணிகள், உண்ணிகள் மற்றும் ஈக்கள் சுற்றியுள்ள இடங்களுக்கு கிருமிகளை பரப்புகிறது’ என்கின்றனர். புறாக்களின் எச்சங்கள் மற்றும் இறகுகளில் இருந்து தோன்றும் ஆன்டிஜென், நுரையீரலுக்குள் சென்று நோயெதிர்ப்பு திறனை பாதித்து, நுரையீரலை சேதப்படுத்துவதாக அவர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக, காட்டுப் பறவைகளோடு ஒப்பிடும்போது, வீட்டில் வளர்க்கப்படும் பறவைகளுக்கு காற்றில் பரவக்கூடிய நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடும் நோயெதிர்ப்பு திறன் குறைவாக இருக்கிறது. வளர்ப்புப் பறவைகளின் எச்சங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும்போதோ அல்லது உலர்ந்த எச்சங்களின் விளைவாக ஏற்படும் ஏரோசோல்களை சுவாசிக்கும்போதோ பல்வேறு நோய்கள் ஏற்படக்கூடும்.

பறவைகள் Uricotelic (நைட்ரஜன் கழிவுகளை யூரிக் அமிலமாக, உருண்டை வடிவிலோ அல்லது குறைந்த அளவு நீர் இழப்புடன் பேஸ்ட் வடிவிலோ வெளியேற்றும் உயிரினங்கள் யூரிகோடெலிக் விலங்குகள் என்று அழைக்கப்படுகின்றன) வகையைச் சேர்ந்தது என்பதால், அவை இரத்த ஓட்டத்தில் இருந்து நைட்ரஜன் கழிவுகளை யூரியா மற்றும் அமோனியாவுக்கு பதிலாக யூரிக் அமிலமாக வெளியேற்றுகின்றன. பறவைகளுக்கு சிறுநீர்ப்பை இல்லை, மலத்துடன் யூரிக் அமிலத்தை அவை வெளியேற்றுகிறது.

Also Read : மாணவர்கள், இளைஞர்களை அச்சுறுத்தும் ‘இன்டெர்நெட் அடிக்‌ஷன் டிஸார்டர்’! What Is Internet Addiction Disorder?

புறா எச்சங்கள் காய்ந்த பிறகு பொடியாகி, தூசிகள் காற்றில் கலக்கும். ஏசிக்காக மூடப்பட்ட அறைகள், காற்றோட்டமில்லாத அறைகள், சற்று ஈரப்பதம் கொண்ட அறைகளில் இப்பூஞ்சைகள் வாசம் செய்யக்கூடும். இவை ஏற்படுத்தும் தொற்று தான் ஹிஸ்டோப்ளாஸ்மாசிஸ் (Histoplasmosis). அதாவது நுரையீரல் பாதிப்பு.

புறா கழிவுகள் பூஞ்சைகளின் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பதால், மல அமோனியா, எரிச்சல் மற்றும் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும். எனவே எச்சங்கள் மீது காலடி வைக்காமல் கவனமாக இருக்க வேண்டும் என்று கால்நடை நுண்ணுயிரியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த எச்சங்கள் மூலம் சுமார் 60 வெவ்வேறு நோய்கள் பரவக்கூடும் என்று ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளதாகக் குறிப்பிடும் அவர்கள், ஒரு முறை சுவாசித்தவுடன், இந்த நோய்க்கிருமிகள் மண்ணீரல் மற்றும் கல்லீரலை பாதிக்கத் தொடங்கிவிடும் என்கின்றனர்.

புறா எச்சங்கள், கிரிப்டோ-காக்கஸ் நியோஃபோர்மன்ஸின் (உலகம் முழுவதும் சுற்றுச்சூழலில் வாழும் ஒரு வகைப் பூஞ்சை) மிக முக்கியமான ஆதாரமாக இருக்கிறது. இது கூடு கட்டும் இடங்களைச் சுற்றியுள்ள எச்சங்களின் குவிப்புகளில் இந்தப் பூஞ்சை காணப்படுகிறது. புறாக்களின் மேல் இறக்கைகளில் நோய்க்கிருமிகள் எதுவும் கண்டறியப்படவில்லை, ஆனால் கீழ் இறக்கைப் பகுதிகளில் அதிக அளவு நோய்க்கிருமிகள் இருப்பது ஆய்வறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த நோய்க்கிருமிகள் வயிற்றுப்போக்கு, டைபாய்டு, பாக்டீரியா இரைப்பை குடல் அழற்சி மற்றும் ஹெபடைடிஸ் போன்ற நோய்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

புறா எச்சங்களால் ஏற்படும் நோய்கள்:

  • பாக்டீரியா: ஈ.கோலி, சால்மோனெல்லா, லிஸ்டெரியோசிஸ், கேம்பிலோபாக்டீரியோசிஸ், சைட்டாகோசிஸ், ஏவியன் காசநோய்
  • பூஞ்சை: ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ், கிரிப்டோகாகோசிஸ் மற்றும் கேண்டிடியாசிஸ்
  • வைரஸ்: பறவைக் காய்ச்சல், நியூகேசில் நோய்
  • ஒட்டுண்ணி / புரோட்டோசோவல்: டோக்ஸோபிளாஸ்மோசிஸ் ட்ரைக்கோமோனியாசிஸ்

புறாக்களின் எச்சங்கள், இறகுகள் ஹைபர்சென்சிட்டிவ் நிமோனியா எனப்படும் சுவாசக் கோளாறை ஏற்படுத்தும். பறவை வளர்ப்போர் மத்தியில் நுரையீரல் பாதிப்பு அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். செல்லப்பிராணிகள் கடையில் வேலை செய்வோர், கோழிப் பண்ணைகளில் வேலை செய்வோர், தொடர்ச்சியாகப் புறாக்களுக்கு உணவளிப்போருக்கு இந்தப் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. மேலும், பறவைக் காய்ச்சல் h1n2 இல் இருந்து கொரோனா வரை, பறவை வழி பரவலுக்கு பாதமாய் நிற்பவை புறாக்கள்தான்.

Also Read : உடல் பருமன் அறிகுறிகள்; ஏற்படுத்தும் நோய்கள்! Obesity: What You Need to Know!

ஏவியன் ஹைபர்சென்சிட்டிவிட்டி நிமோனிடிஸ் (Hypersensitive Pneumonia) என்றும் அழைக்கப்படும் இந்த பாதிப்பு, பறவையின் எச்சங்கள், தூசிகள் மற்றும் இறகுகளால் சூழப்பட்ட இடத்துக்கு அடிக்கடி செல்ல நேரிட்டால் ஏற்படும். இது ஒரு நுரையீரல் நோயாகும். இது மெல்ல மெல்ல நுரையீரலில் குணப்படுத்த முடியாத சேதத்தை ஏற்படுத்தும். மெதுவாக சுவாசச் செயலிழப்பை உண்டுபண்ணும். இதைக் கண்டறிவது கடினம் என்பதால், கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

பறவைகள் வளர்ப்போர் மத்தியில் ஏற்படும் நுரையீரல் பாதிப்பு இதுவரை முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை. நோயின் பொதுவான அறிகுறிகளாக, மூச்சுத்திணறல், வறட்டு இருமல், சோர்வு, அதிக காய்ச்சல், தசைவலி, நாள்பட்ட இருமல், எதிர்பாராத எடை இழப்பு, நெஞ்சு இறுக்கம் உள்ளிட்டவற்றைக் குறிப்பிடலாம். புற்றுநோய் சிகிச்சையாக கீமோ எடுத்துக்கொள்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்திக்குறைபாடு கொண்டவர்கள் புறாக்கள் மூல் பரவும் தொற்றுகளால் மோசமாக பாதிக்கப்படுவர். கோழிப் பண்ணைகளில் வேலை செய்பவர்கள், மண்ணோடு அதிகமாக புழங்குபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். நோய் அறிகுறிகள் தென்பட்டால் தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று மருத்துவர் கண்காணிப்பில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

Don’t feed pigeons; their poop can cause more than 60 diseases | Getty Image

புறாக்கள் உள்ளிட்ட பறவைகளுக்கு உணவளிப்பதை வழக்கமாக வைத்திருந்தால், அந்த இடத்தையும், அது தங்கும் இடத்தையும் தொடர்ச்சியாக சுத்தம் செய்வது அவசியம். அதன் எச்சங்கள் ஆபத்தானது என்பதால், அதில் இருந்து விலகியே இருக்க வேண்டும். புறா உள்ளிட்ட பறவைகளின் எச்சங்களை சுத்தம் செய்யும் போது, கையுறைகள், ஷூ மற்றும் முகக்கவசங்களை அணிய வேண்டும். வித்துக்கள் காற்றில் பரவாமல் இருக்க எச்சங்கள் மீது தண்ணீர் தெளிக்க வேண்டும். பறவைகளுக்கு உணவளிப்பதைத் தவிர்ப்பதே சிறந்தது. புறா உள்ளிட்டவற்றை வளர்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.

Disclaimer : If you have any concerns about being exposed to pigeon droppings, please speak to your doctor.This is only an article for awareness. 

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry