வேல்ஸ் மீடியா செய்தி எதிரொலி! புதுச்சேரி பாஜக நிர்வாகி ‘விசிசி’ நாகராஜன் மீது நடவடிக்கை! சாமிநாதன் அதிரடி!

0
86

புதுச்சேரி மாநில தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தவிசிசிநாகராஜன், ஊடக பொறுப்பாளர் (Media Incharge) பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி மாநில தலைவரும், நியமன எம்.எல்..வுமான சாமிநாதன் பாஜகவை கம்பெனி போல நடத்துவதாக விசிசி நாகராஜன் குற்றம்சாட்டியிருந்தார். மாநிலத்தில் கட்சியின் வளர்ச்சி கேள்விக்குறியாகிவிட்டதாகவும் அவர் வேல்ஸ் மீடியாவிடம் தெரிவித்திருந்தார்.

இதுபற்றி புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதனிடம் வேல்ஸ் மீடியாக சார்பாக பேசியபோது, கட்சிப் பொறுப்பில் இருந்துவிசிசிநாகராஜன் நீக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் இருந்து வந்த அவருக்கு, ஊடக பொறுப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. தேசிய செயலாளர் ஹெச். ராஜா ஊடகத்தினரை சந்திக்கும்போது, நாற்காலி போட்டு உடன் அமர்ந்த அவரை, அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தினோம்.

கட்சியின் முன்னணி நிர்வாகிகளே அவ்வாறு அமராத நிலையில், மீடியா பொறுப்பாளரான இவர் சரிக்கு சமமாக அமர்வதை எப்படி ஏற்க முடியும்? அப்போதே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் கட்சிக்கு வந்தே 3 மாதங்கள்தான் ஆகியிருக்கும். கட்சி அலுவலகத்துக்கு சேர், டேபிள் கொடுத்ததாக அவர் கூறியது தவறு. கட்சியில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அவருக்கு ஊடக பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது.

ஊடகத்தினரை ஒருங்கிணைப்பதுதான் அவரது பணி, ஆனால் அவர் தலைமையின் கவனத்துக்கு கொண்டுவராமல் அறிக்கை வெளியிடுகிறார். அவர் சொன்ன புகார்கள் அனைத்தும் பொய்யானது. விசிசி நாகராஜனால் கட்சியோ, தாமோ எந்தப் பலனும் அடைந்ததில்லை. தவறான நடவடிக்கையின் காரணமாக ஏற்கனவே இரண்டு முறை எச்சரிக்கப்பட்ட நாகராஜன், தற்போது பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாகவும் சாமிநாதன் கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry