தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்கிறது! கடைகளில் டீ, காபி விலையும் அதிகரிக்கும் சூழல்!

0
108

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி-பிப்ரவரி மாதம் ஒரு முறையும், ஏப்ரல், மே மாதம் ஒருமுறையும் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு தலா ரூ.4 வீதம் உயர்த்தியது.

இந்த நிலையில் 3-வது முறையாக தனியார் பால் விற்பனை விலை உயர்த்தப்படுகிறது. இன்று முதல் சீனிவாசா பால் நிறுவனம் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி இருக்கிறது. ஹட்சன் நிறுவனம் நாளை(12-ந்தேதி) முதல் பால், மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ. 4 உயர்த்துவதாக அறிவித்துள்ளது. மற்ற நிறுவனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக விலையை உயர்த்தப்போவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தின் பால் தேவையில் 84 சதவீதம் அதாவது 1.25 கோடி லிட்டர் தனியார் பால் நிறுவனங்கள் பூர்த்தி செய்கிறது. அதாவது, தமிழகத்தில் தினமும் சுமார் 2.25 கோடி லிட்டர் பால் உற்பத்தி நடைபெறுகிறது. இதில் தமிழக அரசின் ஆவின் நிறுவனம் சுமார் 38.26 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்கிறது. மீதம் உள்ள பாலை தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன.

ஆவின் நிறுவனம் தினமும் 16.41 லட்சம் லிட்டர் பாலை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்கிறது. தனியார் நிறுவனங்கள் 1.25 கோடி லிட்டர் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்கின்றன.

தமிழகத்தில் தினசரி பால் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஆவின் வெறும் 16 சதவீதம் மட்டுமே பங்களிப்பதாலும், மீதமுள்ளவற்றில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு 84 சதவீதம் என்கிற நிலையில் இருப்பதாலும், பொதுமக்களும், உணவகங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட வணிகம் சார்ந்த நிறுவனங்களும் தனியார் பாலினையே சார்ந்திருக்கின்றன. எனவே, இந்நிறுவனங்கள் தன்னிச்சையாக கொள்முதல் விலையை குறைப்பதுடன், விற்பனை விலையை உயர்த்துகிறது.

Also Read : நிலக்கரி எடுப்பதால் ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பாதிப்பு! அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட மத்திய அரசு!

தனியார் பால் நிறுவனங்கள் தன்னிச்சையாக விலையை உயர்த்துவதை தமிழக அரசு தலையிட்டு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

சு.ஆ. பொன்னுசாமி, பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம்.

தனியார் நிறுவனங்கள் தன்னிச்சையாக பால் விலையை உயர்த்துவதை வரைமுறைப்படுத்த, பாலுக்கான விலையை அரசே நிர்ணயம் செய்யும் வகையில் பால் கொள்முதல், விற்பனை விலை ஒழுங்கு முறை ஆணையம் ஒன்றை அரசு அமைக்க வேண்டும் என்று பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Also Read : போதைப்பொருள் புழக்கம் எதிரொலி! விற்பனையாளர்களின் சொத்துக்களை முடக்க முதல்வர் உத்தரவு!

2020-ம் ஆண்டு கொரோனா தொற்று ஊரடங்கை அமல்படுத்துவதற்கு முன்பு தனியார் பால் விற்பனை விலை லிட்டருக்கு ரூ.6 வரை உயர்த்தப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது விற்பனை சரிந்து விட்டதாக கூறி அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.18 வரை குறைத்தது. ஆனால் விற்பனை விலையை ஒரு ரூபாயை கூட குறைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry