திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே தளுதாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய தி.மு.க கவுன்சிலராக இருப்பவர் நித்யா. இவரது கணவர் வெற்றிச்செல்வன், இதே பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் 2 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.
Also Read : 14 மாதங்களில் ரூ.20 ஆயிரம் கோடி ஊழல்! நல்ல திட்டங்களை முடக்குவதாக ஈபிஎஸ் விமர்சனம்!
கடன் வாங்கி பல வருடங்கள் கடந்தும் வெற்றிச்செல்வன் கடனை திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த குணசேகரன், நேற்று வெற்றிச்செல்வன் வீட்டிற்கு சென்று பணத்தை திரும்பக் கேட்டுள்ளார்.
அப்போது குணசேகரனை தகாத வார்த்தைகளால் திட்டிய வெற்றிச்செல்வன், அரிவாளால் குணசேகரனை வெட்ட முயன்றுள்ளார். தடுக்க முயன்றவர்களையும் அரிவாளை எடுத்துக் கொண்டு துரத்தினார். அவர்கள் பயந்து இங்கும் அங்குமாக ஓடினர். ஆனாலும் விடாமல் அவர்களை வெற்றிச் செல்வன் துரத்திக் கொண்டே ஓடினார்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே தளுதாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய தி.மு.க கவுன்சிலரின் கணவர் வெற்றிச்செல்வன், கடனை திருப்பிக்கேட்டவரை கொல்ல முயற்சித்துள்ளார். pic.twitter.com/tnFrv6ICPO
— VELS MEDIA (@VelsMedia) August 11, 2022
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடன் கொடுத்தவரை, திமுக பிரமுகர் வெற்றிச் செல்வன் அரிவாளால் வெட்ட முயலும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்த சிறுகனூர் காவல்நிலைய போலீஸார், இன்று அதிகாலை வெற்றிச்செல்வனை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி உள்ளனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry