போதை கும்பலுடன் கைகோர்த்தால் கடும் நடவடிக்கை! அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!

0
64

சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” திட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரும்பாலும் நான் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் நேரத்தில், “மகிழ்ச்சி அடைகிறேன், பெருமை அடைகிறேன்” என்று சொல்வதுண்டு. ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுகின்றபோது சொல்ல முடியவில்லை. ஏனென்றால், ஒருவிதமான கவலை அளிக்கும் மனநிலையில்தான் இந்த நிகழ்ச்சியில் நின்று கொண்டிருக்கிறேன்.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதை மருந்துகளின் பயன்பாடும், அதற்கு அடிமையாகிறவர்கள் தொகையும் அதிகமாகி வருவதை நினைக்கும்போது, எனக்கு கவலையும் வருத்தமும் அதிகமாகிறது. இதனை தடுக்க வேண்டுமானால் இரண்டு விதமான முறைகளில் நாம் சென்றாக வேண்டும். முதல் வழி, போதை மருந்து நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது. அதனை விற்பனை செய்பவர்களைக் கைது செய்வது. போதை மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை உணர்த்துவதும் இரண்டாவது வழி.

Also Read : போதைப்பொருள் புழக்கம் எதிரொலி! விற்பனையாளர்களின் சொத்துக்களை முடக்க முதல்வர் உத்தரவு!

முதல் வழி சட்டத்தின் வழி! இதனை அரசும் – குறிப்பாக, காவல் துறையும் கவனிக்கும்; இரண்டாவது வழி என்பது விழிப்புணர்வு வழி; பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் மட்டும்தான் அத்தகைய விழிப்புணர்வை நம்மால் ஏற்படுத்த முடியும். சட்டத்தின் வழியாக அரசு என்ன செய்யவேண்டும் என்பது பற்றி நேற்றைய தினம் இதே கலைவாணர் அரங்கத்தில், மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

சட்டம் அதன் கடமையை உறுதியாகச் செய்யும்! அப்படி அந்த கடமையைச் செய்யத் தவறக்கூடிய அதிகாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்தக் கூட்டத்தின் வாயிலாக கடுமையாகக் கூற விரும்புகிறேன். இப்போது தி.மு.க. ஆட்சியில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறது. குற்றங்கள் குறைந்துள்ளன. திமுக ஆட்சி அமைந்தது முதல் 41,625 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதுவரை ரூ.50 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் போதைப் பொருட்கள் நடமாட்டத்துக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.

Also Read : தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்கிறது! கடைகளில் டீ, காபி விலையும் அதிகரிக்கும் சூழல்!

அதை எப்படியாவது பெற்றுவிடுகிறார்கள். அவர்கள் கைக்கு எப்படியோ போய்ச் சேர்ந்து விடுகிறது. இந்த சங்கிலியை உடைத்தாக வேண்டும். போதைப் பொருளானது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு போய்ச் சேரும் சங்கிலியை நாம் உடைத்தாக வேண்டும். எந்தக் குற்றமாக இருந்தாலும், அதில் சட்டத்தின் பங்கு பாதிதான். குற்றவாளிகளின் மனமாற்றமானது பாதியளவு இருக்க வேண்டும்.

சாதாரண நோயாக இருந்தால் அதில் பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்ற அவரது பெற்றோர், குடும்பம், உறவினர்கள் போதும்! ஆனால் போதை போன்ற சமூக நோயாக இருக்குமானால் அதில் பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்ற ஒட்டுமொத்த சமூகமே முயற்சிகள் எடுத்தாக வேண்டும். போதை என்பது ஒருவரை அழித்து, சமூகத்தையும் அழித்துவிடும். போதைக்குக் காரணங்களைத் தேடாதீர்கள், பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைத் தேடுங்கள், அதனுடைய முடிவில் வெற்றி காத்திருக்கும்.

Also Read : கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டதால் ஆத்திரம்! அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற திமுக பிரமுகர்!

போதை மருந்தின் தீமைகளை பட்டியலிடுங்கள் என்று மருத்துவர்கள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் சொன்னார்கள், அதைக் கேட்டபோது பீதியே ஏற்பட்டது. இந்தப் போதையை விலை கொடுத்து வாங்கலாமா? இந்த அழிவுப்பாதையில் செல்லலாமா? இத்தகைய மோசமான வாழ்க்கை தேவையா? போதையின் இத்தகைய கொடுமையான தன்மையை நாம் அனைவரும் உணர்ந்தாக வேண்டும். விலைமதிப்பு இல்லாத மனித உயிர்களை இப்படி ஒட்டுமொத்தமாக சிதைத்துக் கொள்ளக் கூடாது என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

போதைதான் கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு தூண்டுகோளாக இருக்கிறது. போதைப் பொருட்களின் நடமாட்டத்தை இந்தச் சமூகத்தைச் சேர்ந்த அனைவரும் சேர்ந்துதான் தடுத்தாக வேண்டும். இது மக்கள் இயக்கமாகச் செயல்பட வேண்டும்.

Also Read : நாட்டை விற்க தரகு வேலை செய்கிறார் மோடி! அடிமாட்டு விலைக்கு 5G அலைக்கற்றை விற்பனை! சீமான் ஆவேசம்!

போதை மருந்தை பயன்படுத்துபவர் இதில் இருந்து விடுபட வேண்டும், விடுபட்டவர், போதை பயன்பாட்டுக்கு எதிராக பரப்புரைச் செய்தாக வேண்டும், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை போதைப் பொருளை பயன்படுத்தாமல் கண்காணிக்க வேண்டும், இதே கடமை பள்ளி ஆசிரியர்களுக்கு இருக்கிறது, இதே பணி, கல்லூரிகளின் நிர்வாகத்துக்கு இருக்கிறது, வியாபாரிகள், கடைக்காரர்கள் இதை விற்கமாட்டேன் என உறுதி எடுக்க வேண்டும்.

போதையின் தீமையை மருத்துவர்கள், குறிப்பாக மனநல மருத்துவர்கள் பரப்புரை செய்ய வேண்டும். போதையில் விழுந்தவர்களை மீட்கும் பணியை சமூகநல அமைப்புகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் செய்தாக வேண்டும். இதில் பெற்றோர், ஆசிரியர்களின் பங்கு மிகமிக முக்கியமானது. பாதி நேரம் பெற்றோருடனும், பாதி நேரம் ஆசிரியர்களுடனும்தான் படிக்கும் காலத்தில் பிள்ளைகள் இருக்கிறார்கள். எனவே அவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இருக்கிறது.

Also Read : 14 மாதங்களில் ரூ.20 ஆயிரம் கோடி ஊழல்! நல்ல திட்டங்களை முடக்குவதாக ஈபிஎஸ் விமர்சனம்!

பெற்றோர்கள் பாதி ஆசிரியர்களாகவும், ஆசிரியர்கள் பாதி பெற்றோர்களாகவும் இருந்து மாணவச் சமுதாயத்தை வளர்த்தால், போதை போன்ற தவறான பழக்கங்களில் யாரும் ஈடுபட மாட்டார்கள். சட்டத்தின் காவலர்களாக போதைப் பொருள்களைத் தடுக்க மாவட்ட ஆட்சியர்களும், காவல்துறை கண்காணிப்பாளர்களும் இருப்பதைப் போல, விழிப்புணர்வின் காவலர்களாக பெற்றோர்களும், ஆசிரியர்களும் செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

மேற்கத்திய நாடுகளில் போதை மருந்து பழக்கங்கள் குறைந்து ஆசிய நாடுகளில் அதிகமாகி வருவதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. மேற்கத்திய நாடுகளில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு அதிகமானதுதான் இதற்குக் காரணம். அத்தகைய விழிப்புணர்வு பரப்புரையில் மக்கள் பிரதிநிதிகளாகிய நீங்கள் அனைவரும் ஈடுபட வேண்டும். இதுவும் மக்களைக் காக்கக்கூடிய பணிதான் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

Also Read : அச்சுறுத்தும் ‘மின்சார சட்டத் திருத்த மசோதா’! தனியார்மயமாகும் மின்துறை! ஊசலாட்டத்தில் இலவச மின்சாரம்!

போதை மருந்துகள் நம் மாநிலத்துக்குள் நுழைவதைத் தடுத்தாக வேண்டும். பரவுவதை தடுத்தாக வேண்டும். விற்பனையாவதை தடுத்தாக வேண்டும். பயன்படுத்துவதை தடுத்தாக வேண்டும். பயன்படுத்துபவர்களை அதில் இருந்து மீட்டாக வேண்டும். இதுவரை பயன்படுத்தாத இன்னொருவர் கைக்கு அது போய்ச்சேராமல் தடுத்தாக வேண்டும். போதையின் பாதையை அடைப்பதும் எளிதுதான். போதையில் இருப்பவரை மீட்பதும் எளிதுதான். அதனை அவர்களுக்கு சொல்லவேண்டிய முறையில் சொல்லியாக வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry