நாடாளுமன்றத்தில் ஃபிளையிங் கிஸ் கொடுத்த ராகுல் காந்தி! கண்ணியமற்ற நடத்தை என கொந்தளிக்கும் பாஜக பெண் எம்.பி.க்கள்!

0
100
மக்களவையில் ராகுல் காந்தி | புகார் கடிதத்துடன் மத்திய அமைச்சர் சோபா கரந்தலாஜே

மணிப்பூர் விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான 2-வது நாள் விவாதம் இன்று நண்பகல் 12 மணிக்கு தொடங்கியது.

விவாதத்தைத் தொடங்கிய வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “சபாநாயகர் அவர்களே, முதலில் மீண்டும் என்னை மக்களவையில் இணைத்துக் கொண்டதற்கு நான் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த முறை நான் பேசியபோது அதானியை குறித்து பேசியது உங்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கலாம். உங்கள் மூத்த தலைவர்கள் வேதனை அடைந்திருக்கலாம். அந்த வேதனை உங்களையும் பாதித்திருக்கலாம். அதற்காக நான் உங்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ஆனால், நான் உண்மையைப் பேசினேன். இன்று நான் அதானி பற்றி பேசப் போவதில்லை’ மணிப்பூர் பற்றியே பேசப் போகிறேன் என்பதால் எனது பாஜக நண்பர்கள் அச்சப்பட வேண்டிதில்லை.

Also Read : வார ராசி பலன்! சோஷியல் மீடியாவால இந்த ராசிக்காரர்களுக்கு சிக்கல்! கருத்து கந்தசாமியா இருந்தா சிக்குவீங்க… உஷார்!

பிரதமர் மோடிக்கு மணிப்பூர் மாநிலம் என்பது இந்தியாவின் பகுதியாக இல்லை. மணிப்பூரை இரண்டாக பிரித்து வைத்துள்ளார் பிரதமர் மோடி. நீங்கள் மணிப்பூரில் இந்தியாவைக் கொலை செய்துள்ளீர்கள். இந்தியா என்பது நமது மக்களின் குரல். நீங்கள் மணிப்பூரில் அந்தக் குரலைக் கொலை செய்துள்ளீர்கள். மணிப்பூரில் பாரத மாதாவை கொலை செய்திருக்கிறீர்கள். நீங்கள் மணிப்பூர் மக்களைக் கொலை செய்திருக்கிறீர்கள். நீங்கள் இந்தியாவைக் கொலை செய்திருக்கிறீர்கள். நீங்கள் துரோகிகள்… தேச பக்தர்கள் அல்ல!

என் அம்மா இங்கே அமர்ந்திருக்கிறார். நீங்கள் என்னுடைய இன்னொரு அம்மாவை மணிப்பூரில் கொலை செய்தீர்கள். இந்திய ராணுவத்தால் ஒரேநாளில் மணிப்பூரில் அமைதியை கொண்டுவர முடியும். ஆனால், நீங்கள் அதைச் செய்யவில்லை. இந்தியாவின் குரலைக் கேட்க மோடி தயாராக இல்லை.இலங்கை அனுமனால் எரிக்கப்படவில்லை; மாறாக ராவணனின் ஆணவத்தால் எரிந்தது. ராமனால் ராவணன் கொல்லப்படவில்லை. ஆணவத்தால் ராவணன் கொல்லப்பட்டார்.

நீங்கள் மொத்த நாட்டையும் எரிக்க விரும்புகிறீர்கள். முதலில் மணிப்பூர், பிறகு ஹரியாணா. நீங்கள் நாட்டையே எரிக்க முயற்சி செய்கிறீர்கள்” என்று ராகுல் காந்தி பேசினார். இதனைத் தொடர்ந்து ராஜஸ்தானில் நடக்கும் ஒரு பேரணியில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி கிளம்பிச் சென்றார். போகும்போது பறக்கும் முத்தம் கொடுத்துவிட்டுச் சென்றார். இந்தக் காட்சியை பாஜக ஐ.டி. விங் தலைவர் அமித் மால்வியா Xல்(டிவிட்டர்) வெளியிட்டுள்ளார்.

ராகுல் காந்தியின் நடவடிக்கை இப்போது சர்ச்சையாகிவிட்டது. இதுகுறித்துப் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, “எனக்கு முன்னதாகப் பேசியவர், தவறாக நடந்துகொண்டார். பெண்கள்மீது தவறான எண்ணம் கொண்டவர்களால் மட்டுமே பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பறக்கும் முத்தம் கொடுக்க முடியும். இது அவர் குடும்பத்தினரும், கட்சியினரும் பெண்கள் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இது போன்ற கண்ணியமற்ற நடத்தையை நாட்டின் நாடாளுமன்றத்தில் இதற்கு முன்பு பார்த்ததில்லை. பெண்களின் கண்ணியத்தைக் காக்க சட்டங்களை இயற்றும் ஒரு அவையில், பெண்கள் மீதான வெறுப்பை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்“ என்றார்.

Union Minister Smriti Irani

சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுத்துப்பூர்வ புகார் அளித்துள்ள 20-க்கும் மேற்பட்ட பாஜக பெண் எம்.பி.க்கள், ‘அவையில் ஸ்மிருதி இரானி பேசிக்கொண்டிருந்தபோது ராகுல் காந்தி அநாகரிகமாக நடந்து கொண்டார். அவரது இந்த நடவடிக்கை பெண் எம்.பி.க்களை அவமதித்த செயல் மட்டுமல்ல, நாடாளுமன்றத்தின் கண்ணியத்துக்கும் எதிரானது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் சோபா கரந்தலாஜே, “அனைத்துப் பெண் உறுப்பினர்களுக்கும் பறக்கும் முத்தம் கொடுத்துவிட்டு ராகுல் காந்தி அவையிலிருந்து வெளியேறினார். இது நாடாளுமன்ற உறுப்பினரின் தகாத மற்றும் அநாகரிகமான நடத்தை. இந்திய வரலாற்றில் நாடாளுமன்றத்தில் இதுவரை நடக்காதது என மூத்த உறுப்பினர்கள் கூறுகின்றனர். எனவே, சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து, அவர்மீது நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் புகாரளித்திருக்கிறோம்” என்று கூறினார்.

Also Read : குடிநீர் வசதியை செய்து கொடுப்பதில் கூட பாரபட்சம்! பட்டியலின மக்களை விடியா திமுக அரசு வஞ்சிப்பதாக ஈபிஎஸ் கண்டனம்!

இது குறித்து பேசிய மற்றொரு பெண் அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ், “அவையை விட்டு வெளியே செல்லும்போது அவர் (ராகுல் காந்தி) ஃபிளையிங் கிஸ் கொடுத்ததை நாங்கள் விரும்பவில்லை. இது நமது கலாசாரம் அல்ல. நாடாளுமன்றத்தில் இதுபோன்று நடப்பதை சகித்துக்கொள்ள முடியாது” என்று குறிப்பிட்டார். மேலும், மக்களவையில் அநாகரிகமாக நடந்துகொண்டதற்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சபாநாயகரிடம் என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகளின் பெண் எம்.பி-க்கள் புகாரளித்திருக்கிறார்கள்.

இது குறித்துப் பேசிய பா.ஜ.க எம்.பி ஷோபா கரந்த்லாஜே, “அனைத்துப் பெண் உறுப்பினர்களுக்கும் பறக்கும் முத்தம் கொடுத்துவிட்டு ராகுல் காந்தி அவையிலிருந்து வெளியேறினார். இது நாடாளுமன்ற உறுப்பினரின் தகாத மற்றும் அநாகரிகமான நடத்தை. இந்திய வரலாற்றில் நாடாளுமன்றத்தில் இதுவரை நடக்காதது என மூத்த உறுப்பினர்கள் கூறுகின்றனர். எனவே, சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து, அவர்மீது நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் புகாரளித்திருக்கிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry