ரஜினியுடன் மோதும் ஷாரூக்கான்! ஜவான் ரிலீஸ் நாளில் ஓடிடியில் வெளியாகும் ஜெயிலர்!

0
56

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

Also Read : சாராயத்துக்குக் குறைவில்லாத இணைய போதை! மாணவர்கள், இளைஞர்களை அச்சுறுத்தும் ‘இன்டெர்நெட் அடிக்‌ஷன் டிஸார்டர்’! What Is Internet Addiction Disorder?

இந்த படம் சுமார் ரூ. 600 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதிரடி வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து, படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் உரிமையாளர் கலாநிதி மாறன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து காசோலையை வழங்கினார். ரஜினிகாந்துக்கு எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது என்பது இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், படத்தின் லாபத்தில் இது ரஜினியின் பங்கு என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ரஜினியின் சம்பளம், அதாவது லாபத்தில் பங்கு ரூ.225 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

சுமார் 75 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ஜெயிலரின் வெற்றியை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் ஆகிய இருவருக்கும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தலா சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கார்களையும் பரிசளித்தார். இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் ஒரு முழு மாதத்தை முடிப்பதற்கு முன்பே, OTT வெளியீட்டுத் தேதியை சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

செப்டம்பர் 7-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஜெயிலர் வெளியாகிறது. இதே நாளில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாகிறது.

இந்தப் படத்தில், ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, சஞ்சய் தத், பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இரு திரையுலக ஜாம்பான்வான்கள் நடித்த இரு வேறு படம் ஒரே நாளில் திரையரங்கு மற்றும் ஓடிடி தளத்தில் வெளியாவது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry