பொது சிவில் சட்டம், ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ மசோதா! பாஜகவின் பலே அரசியல் கணக்கு! பரபரக்கும் டெல்லி!

0
47
Union Minister Anurag Thakur | File Photo

பொதுத் தேர்தலை முன் கூட்டியே நடத்தும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது பதவிக்காலத்தின் கடைசி நாள் வரை இந்திய குடிமக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா டுடேக்கு அவர் அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியில், “வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களை பொதுத் தேர்தலுடன் நடத்தும் வகையில், தாமதப்படுத்தும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை. தேர்தல் முன்கூட்டியோ, தாமதமாகவோ நடக்கும் என்பது “ஊடகங்களின் ஊகம்”.

“ஒரே நாடு, ஒரே தேர்தல்” குறித்து ஆராய, அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கான விதிமுறைகள் இறுதி செய்யப்படுவதற்கு முன்பு, அந்தக் குழு அரசியல் கட்சிகளுடன் விரிவான விவாதங்களைச் செய்யும். ஓரே நாடு, ஒரே தேர்தல் குழுவில் காங்கிரசைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சௌத்ரி ஒரு அங்கமாக இருப்பதை அரசாங்கம் விரும்புகிறது. எதிர்க்கட்சிகளின் குரல், மோடி அரசின் பெரிய மனதை எடுத்துக்காட்டும்.

Also Read : ‘One Nation, One Election’க்குத் தயாராகும் பாஜக! சாதக, பாதகங்கள் என்னென்ன? முழுமையான அலசல்!

செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்திற்கு அரசாங்கம் பெரிய திட்டங்களை வைத்துள்ளது. சிறப்பு அமர்வின் நிகழ்ச்சி நிரலை உரிய நேரத்தில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெளியிடுவார்.” இவ்வாறு அனுராக் தாகூர் பேட்டியில் கூறியுள்ளார்.

இதனிடையே, அரசியல் சூறாவளிக்கு மத்தியில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் “ஒரே நாடு, ஒரே தேர்தல்”, பொது சிவில் சட்டம், மகளிர் இட ஒதுக்கீடு ஆகிய மூன்று முக்கிய மசோதாக்கள் தாக்கலாகும் என்று தெரிகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தலை பயன்படுத்தி ஆட்சியை நீடிக்க மோடி அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மோடி அரசு, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நாட்டிற்கு நன்மை பயக்கும் அரசியலமைப்புச் சீர்திருத்தம் என்று கூறியுள்ளது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள, 8 பேர் குழு ஆறு மாதங்களுக்குள் தனது அறிக்கையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து அரசு அப்போது முடிவு செய்யும்.

Also Read : அதானி அறிக்கை தொடர்பாக பிரதமருக்கு சரமாரிக் கேள்வி! நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு ராகுல் வலியுறுத்தல்!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம், அரசியல் கட்சிகள் மற்றும் நிபுணர்களிடமிருந்து கலவையான வினைகளை சந்தித்துள்ளது. சிலர் இந்த திட்டத்தை வரவேற்றுள்ளனர், இது பணத்தை மிச்சப்படுத்தும் மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் என்று கூறியுள்ளனர். இந்த திட்டத்தின் சாத்தியக்கூறுகள் மற்றும் அது ஜனநாயகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து சிலர் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

முன்னதாக, மக்களவை, மாநில சட்டசபைகள், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்து பரிந்துரைக்க, எட்டு பேர் கொண்ட குழுவை, மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது. குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, மூத்த காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குலாம் நபி ஆசாத், என்.கே.சிங், அரசியலமைப்பு நிபுணர் சுபாஷ் சி காஷ்யப், ஹரிஷ் சால்வே, சஞ்சய் கோத்தாரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry