ரூ. 2000 நோட்டை திரும்ப பெறுகிறது ரிசர்வ் வங்கி! செப்டம்பர் 30 வரை மட்டுமே செல்லும்!

0
113
RBI has decided to withdraw the Rs 2,000 note from circulation

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2016-ம் ஆண்டு, நவ.8 ல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்திலிருந்த, 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவிக்கப்பட்டு, புதிதாக 2,000, 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, ஒரு நபர் தனது கணக்கில் இருந்து எவ்வளவு பணம் எடுக்கலாம் என்பதற்கு ஆரம்பத்தில் வரம்புகள் விதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், ரூ.2,000 நோட்டின் அதிக மதிப்பு காரணமாக, குறைவான எண்ணிக்கையிலான நோட்டுகளுடன் அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை உருவாக்க உதவியது. மார்ச் 31, 2017 நிலவரப்படி, ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ள கரன்சி மதிப்பில் 50.2 சதவீதம் ஆக இருந்தது. நாளடைவில் 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதையும் ஆண்டுக்கு ஆண்டு மத்திய அரசு குறைத்து வந்தது. 2018-19இல் 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

Also Read : சென்னையில் அதிகரிக்கும் மின்வெட்டு! அமைச்சரின் ‘அடடா’ விளக்கத்தால் அதிர்ந்துபோயுள்ள தலைநகர்வாசிகள்! தூக்கமின்றி தவிப்பதாக வேதனை!

இந்நிலையில் ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

  • கிளீன் நோட் பாலிஸி என்ற அடிப்படையில் ரூ. 2000 நோட்டுகளை திரும்பபெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதையடுத்து ரூ. 2000 நோட்டுகள் வெளியிடுவதை வங்கிகள் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
  • கையிருப்பில் வைத்துள்ள ரூ. 2000 நோட்டுகளை வரும் 23 ம் தேதி முதல் செப்.30ம் தேதி வரை வங்கியில் டிபாசிட் செய்யலாம். ஒரு நாளைக்கு ரூ. 20,000 வரை மாற்றிக்கொள்ளலாம்.
  • ரூ. 2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தாலும் செப். 30-ம் தேதி வரையே செல்லுபடியாகும்.
  • அனைத்து வங்கிகளும் செப்டம்பர் 30, 2023 வரை ₹2000 ரூபாய் நோட்டுகளுக்கு டெபாசிட் அல்லது மாற்றும் வசதியை வழங்க வேண்டும்.
  • சாதாரண பரிவர்த்தனைகளில் ரூ. 2000 நோட்டு பயன்படுத்துவது குறைந்துள்ளதையடுத்து மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • புழக்கத்தில் உள்ள மற்ற ரூபாய் நோட்டுகள் தேவைக்கு போதுமானதாக உள்ளது. இவ்வாறு ஆர்பிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த செய்திக்குறிப்பில், சுமார் 89% 2000 ரூபாய் நோட்டுகள் மார்ச் 2017க்கு முன் வெளியிடப்பட்டன. அவற்றின் ஆயுட்காலம் 4-5 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டது. புழக்கத்தில் உள்ள இந்த ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு, மார்ச் 31, 2018 அன்று உச்சத்தில் இருந்த ₹6.73 லட்சம் கோடியிலிருந்து (புழக்கத்தில் உள்ள நோட்டுகளில் 37.3%) ₹3.62 லட்சம் கோடியாகக் குறைந்தது. சதவீத அளவில் இது 10.8 மட்டுமே.

இந்நிலையில், மார்ச் 31, 2023 அன்று புழக்கத்தில் உள்ள நோட்டுகள், பரிவர்த்தனைகளுக்கு பொதுவாகப் பயன்படுத்துவதில்லை என்பது கவனிக்கப்பட்டது. அந்த வகையில், பொதுமக்களின் கரன்சி தேவையை பூர்த்தி செய்ய மற்ற வகை ரூபாய் நோட்டுகளின் இருப்பே போதுமானதாக உள்ளது என்பது தெரிய வந்தது.

Also Read : பெரும் சிக்கலில் செந்தில்பாலாஜி! பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி!

மார்ச் 31, 2017 நிலவரப்படி, ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ள கரன்சி மதிப்பில் 50.2 சதவீதம் ஆக இருந்த நிலையில், அவற்றின் புழக்கம் கணிசமாகக் குறைந்து வந்தது. 2020, 2021, 2022ம் நிதியாண்டுகளில் ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டைஒன்றைக்கூட அச்சிடவில்லை. இதன் விளைவாக, மார்ச் 31, 2022 நிலவரப்படி, மதிப்பு அடிப்படையில், புழக்கத்தில் உள்ள அனைத்து கரன்சி நோட்டுகளிலும், 2000 ரூபாய் நோட்டுகள் 13.8 சதவீதம் மட்டுமே.

பல ஆண்டுகளாக இந்த நோட்டுகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கி நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2020 நிதியாண்டின் முடிவில் 274 கோடியாக இருந்த ரூ.2,000 கரன்சி நோட்டுகளின் எண்ணிக்கை 2022ஆம் நிதியாண்டின் முடிவில் 214 கோடியாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry