சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து? குழந்தை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு பிரேக் அப்பில் முடிகிறது!

0
82

நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய உள்ளதாக கோலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரங்கள் பரபரத்துக் கிடக்கின்றன. சமந்தா அக்கினேனி – சமந்தா பிரபுவாக மாறியது இதை உறுதி செய்வதாக இருக்கிறது.

2017-ம் ஆண்டு, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், இளம் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து சமந்தா திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு, நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான ‘அக்கினேனி’ஐ தனது பெயருடன் சமந்தா இணைத்துக்கொண்டார். சமூக ஊடகங்களில் சமந்தா அக்கினேனி(Samantha Akkineni) என்று தனது பெயரை அவர் மாற்றிக் கொண்டார்.

திருமணத்துக்குப் பிறகு ஐதராபாத்தில் ஆடம்பரமான பங்களாவில் சமந்தாவும், நாக சைதன்யாவும் வசித்தனர். சில மாதங்களுக்கு முன் ஐதராபாத்திலேயே மற்றொரு ஆடம்பர ஃபிளாட்டை வாங்கியுள்ளனர். இந்நிலையில்,  சில மாதங்களாக சமந்தா தன்னுடைய டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் நாக சைதன்யா புகைப்படங்களை பகிர்வதை தவிர்த்து, தன்னுடைய கவர்ச்சிப் படங்களை ஷேர் செய்யத் தொடங்கினார். இதன் மூலம் தனக்கும் கணவருக்கும் இடையே பிரச்சனை இருப்பதை சமந்தா மறைமுகமாக தனது ரசிகர்களுக்கு உணர்த்தியாகத் தெரிகிறது. இதனூடே இருவரும் பிரிந்தே வாழ்ந்து வருகிறார்கள்.

கடந்த மாதம் 29-ந் தேதி தனது மாமனார் நாகார்ஜுனாவின் பிறந்த நாளுக்குக் கூட சமந்தா வாழ்த்துச் செய்தி பதிவிடவில்லை, பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் பங்கேற்காமல், தனியாகக் கிளம்பி கோவா சென்றுவிட்டார். ஆனால், நாகார்ஜுனா பிறந்தநாளுக்கு முன்பாகவும், பின்பாகவும் அவர் பலருக்கு டிவிட்டரில் வாழ்த்துச் செய்தி பதிவிட்டார். கடந்த ஏப்ரல் 28 அன்று தனது பிறந்தநாளுக்கு கணவர் நாக சைதன்யா வாழ்த்து தெரிவிக்காததால், மாமனார் நாகர்ஜுனாவுக்கு சமந்தா வாழ்த்துத் தெரிவிக்கவில்லை.

இதன் தொடர்ச்சியாக, தனது பெயரிலிருந்து ‘அக்கினேனி’ஐ-யும் நீக்கிவிட்டு, பழையபடி சமந்தா பிரபு என சமூக ஊடக கணக்குகளை திருத்திவிட்டார். இதனால் சமந்தாவின் குடும்ப உறவில் விரிசல் இருப்பது உறுதியாகியுள்ளது. பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகும் விவகாரத்து என்பதில் சமந்தாவும், நாக சைதன்யாவும் பிடிவாதமாக இருப்பதாக தெரிகிறது. 2020-க்குப் பிறகு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என சமந்தா விரும்பியிருக்கிறார். இதனால் பட வாய்ப்புகளையும் அவர் நிராகரித்து வந்துள்ளார். மூன்று வருடங்களுக்கு படங்கள் வேண்டாம் என்றும் அவர் முடிவு செய்திருந்ததாகத் தெரிகிறது.

ஆனால், இதற்கு நாக சைதன்யா சம்மதிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. குழந்தை பெறுவதற்காக பட வாய்ப்புகளை தவிர்த்த சமந்தா, விக்னேஷ் சிவனின் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார். விவகாரத்து செய்தி பற்றி கருத்து தெரிவித்துள்ள சமந்தா, ஏதாவது சொல்ல வேண்டிய விஷயமாக இருந்தால், எனக்கும் சொல்ல வேண்டும் என்று தோன்றினால் சொல்லுவேன் என்று கூறியுள்ளார். அதேபோல், விவாகரத்து பற்றிய செய்திகளின் வீரியத்தை குறைக்கும் விதமாக, நாகார்ஜுனா தனது தந்தை பிறந்தநாளுக்கா வெளியிட்டிருந்த டிவிட்டர் பதிவை சமந்தா ஷேர் செய்துள்ளார்.

’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை தொடர்ந்து தமிழில் நடிக்க கதை கேட்டு வரும் சமந்தா, தெலுங்கு, இந்தி படங்களிலும் கமிட் ஆகி வருகிறார். நாக சைதன்யாவை விவாகரத்து செய்தாலும், சமந்தாவுக்கு பொருளாதார ரீதியாக எந்த பின்னடைவும் இருக்காது என்றே தெரிகிறது. ஜீவனாம்சம், செட்டில்மென்ட் என 50 கோடி ரூபாய் வரை சமந்தாவுக்கு கிடைக்கலாம். விவாகரத்து விஷயம் இன்னும் 2 முதல் 3 மாதங்களில் தீர்மானமாகிவிடும் என்று கூறப்படுகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry